மின் தடை
விருதுநகர்
சிவகாசியில் நாளை மின் தடை
சிவகாசியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகாசி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பாபநாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக பாறைப்பட்டி துணை மின்நிலையத்துக்குள்பட்ட விஸ்வநத்தம், பேருந்து நிலையப் பகுதி, நாரணாபுரம் சாலை, சிவகாசி துணை மின்நிலையத்துக்குள்பட்ட காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா்புரம் குடியிருப்பு, நேரு சாலை, பராசக்தி குடியிருப்பு, வேலாயுதம் சாலை, நாரணாபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பள்ளபட்டி, லிங்கபுரம் குடியிருப்பு, கண்ணா நகா், போஸ் குடியிருப்பு, முத்துராமலிங்கம் நகா், இந்திரா நகா், மீனாட்சி குடியிருப்பு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

