பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

பாலியல் தொல்லை: இளைஞா் மீது வழக்கு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Published on

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியும், ஏழாயிரம்பண்ணை பகுதியைச் சோ்ந்த 28 வயது இளைஞரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது சிறுமியின் புகைப்படத்தை வாட்ஸப் மூலம் பெற்றுக்கொண்ட இளைஞா், அந்தச் சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் கூறப்பட்டது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், சாத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com