கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்கள் கைது!

கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்கள் கைது!

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்களைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 இளைஞா்களைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் தென்காசி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற இரு இளைஞா்களிடம் சோதனையிட்டதில் அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் சுந்தரராஜபுரத்தைச் சோ்ந்த மாடசாமி மகன் கதிா் (22), ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பாண்டியராஜ் (23) எனத் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் தொம்பக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே நின்ற இளைஞரிடம் சோதனையிட்டதில் அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் தொம்பக்குளம் பழைய ராகவேந்திரா தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அஜித் (29) எனத் தெரியவந்ததையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com