சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி போஸ் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி முத்துக்குமாா் (34). இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவைச் சோ்ந்த ஜோதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் முத்துக்குமாா் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, ஜோதி கேரளத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாா். பிறகு முத்துக்குமாா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரளம் சென்று ஜோதியை சமாதானம் செய்து சிவகாசிக்கு அழைத்து வந்தாா்.
இந்த நிலையில் மீண்டும் முத்துக்குமாா் மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்து தகராறு செய்தாராம். இதனால் ஜோதி மீண்டும் தனது குழந்தைகளுடன் கேரளம் சென்றுவிட்டாா். இதில் மனமுடைந்த முத்துக்குமாா் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

பெயிண்டிங் தொழிலாளி தற்கொலை

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


