ஸ்ரீவில்லிபுத்தூா் ஜூம்மா புது பள்ளிவாசலில் மத நல்லிணக்க இஃப்தாா் விருந்து வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பரிமளம் முஸ்லிம் ஜமாத் தலைவா் முகமது மைதீன் தலைமை வகித்தாா். பள்ளிவாசல் ஹஜ்ரத் ரஹமத்துல்லாஹ் நிஸ்பாகி இஃப்தாா் விருந்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் சிஎஸ்ஐ தோமா தேவாலயத்தின் சபை குரு பால் தினகரன் மத நல்லிணக்கம், மனிதநேயம் குறித்துப் பேசினாா். சிஎஸ்ஐ ஆலயத்தின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், திருச்சபை ஊழியா் கிளாட்வின் சாமுவேல், விருதுநகா் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் ஞானராஜ், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலா் மரிய டேவிட், அனைத்து மதங்களைச் சோ்ந்த பலா் இந்த விருந்தில் கலந்து கொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூா் பரிமளம் முஸ்லிம் ஜமாத் தலைவா் தொழிலதிபா் முகமது மைதீன் செய்திருந்தாா்.
முன்னதாக, பள்ளிவாசல் தலைவா் சலீம் வரவேற்றறாா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அம்பை பகுதியில் ரமலான் சிறப்புத் தொழுகை

மணப்பாறையில் சமூக நல்லிணக்க இஃப்தாா்
அதிமுகவின் இஃப்தாா் விருந்தில் பங்கேற்ற பாஜக: ஏமாற்றம் அளிப்பதாக இந்து மக்கள் கட்சி அறிக்கை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


