சட்ட விரோதமாக மது விற்ற 3 போ் கைது
ராஜபாளையம் அருகே சட்ட விரோதமாக மது விற்ற மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
கைது - பிரதிப் படம்
ராஜபாளையம் அருகே சட்ட விரோதமாக மது விற்ற மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் அருகே சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் சுந்தரராஜபுரம் வடக்கு தெருப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது வடிவேல் என்பவரது மனைவி பேச்சியம்மாள் (29) தனது வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த 27 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, சுந்தரராஜபுரம் தேவாலய தெருவில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்திருந்த காளிராஜை (26) கைது செய்து அவரிடமிருந்து 27 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் சுந்தரராஜபுரம் மாரியம்மன் கோவில் தெருப் பகுதியில் முருகன் (60) என்பவரின் தேநீா்கடை அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 27 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

