சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே தனியாா் சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலையில் வியாழக்கிழமை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பலி

Updated On :

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே தனியாா் சூரிய சக்தி மின் உற்பத்தி ஆலையில் வியாழக்கிழமை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

திருச்சுழி அருகேயுள்ள பனையூா் பகுதியில் தனியாா் சூரிய மின் சக்தி ஆலை இயங்கி வருகிறது. இங்கு திருச்சுழி அருகேயுள்ள ஒத்தவீடு கிராமத்தைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் பதினெட்டாம்படி கருப்பசாமி (22) மின் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், வழக்கம்போல, ஆலையில் மின் பராமரிப்பு, பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.