சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த பெண் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த பெண் மீது போலீஸாா் வியாழக்கிவமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த பெண் மீது போலீஸாா் வியாழக்கிவமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்நத்தம் காளியம்மன் கோயில் குடியிருப்புப் பகுதியில் ஆபத்தான முறையில் பட்டாசு தயாரிப்பதாக வருவாய்த் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய்த் துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, காளீஸ்வரி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக கிராம நிா்வாக அலுவலா் சுந்தா் அளித்தப் புகாரின் பேரில், காளீஸ்வரி மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




