கோடைக் கால விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கான சலுகைகள் என்னென்ன?

கோடைக் காலத்தையொட்டி நிறுவனங்கள் அளிக்கும் சிறப்புச் சலுகைகள் குறித்து...
ஸ்மார்ட்போன்கள்
ஸ்மார்ட்போன்கள்படம் / நன்றி - சாம்சங்
Published on
Updated on
2 min read

கோடைக் காலத்தையொட்டி பல்வேறு நிறுவனங்கள் விற்பனையில் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன.

சிறிய துணிக்கடை முதல் பெரிய மின்னணு பொருள்கள், கார் விற்பனை நிலையங்கள் வரை வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கோடைக் கால சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனமும் இந்திய பயனர்களைக் கவரும் வகையில் கோடைக்கால சலுகைகளை அறிவித்துள்ளது. மே 1ஆம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.

குறிப்பாக இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்களின் விலை பெரிதும் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்க நினைப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில், எந்தெந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

அமேசான் வழங்கியுள்ள சிறப்பு சலுகையில் சாம்சங், ஆப்பிள், ஒன்பிளஸ், ஐகியூ, ஷாவ்மி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு விலை குறைந்துள்ளது, பழைய ஸ்மார்ட்போன்களை மாற்றிக்கொண்டால் விலை எவ்வளவு மாறுபடும், சலுகைக் கால நிர்ணயம், வங்கி தரப்பிலான சலுகைகள் என்னென்ன? என்பன உள்ளிட்டவற்றை இப்போது அறிந்துகொள்ளலாம்.

ஸ்மார்ட்போன்கள் வாங்க வேண்டும், பழையனவற்றை மாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தக் கோடை சிறப்புச் சலுகை மிகப் பெரிய வாய்ப்பு.

குறிப்பாக, பட்ஜெட் இருக்குமானால், பலரின் கனவாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ் 24 ஸ்மார்ட்போனை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 1,34,999. ஆனால் கோடைக்கால சிறப்புச் சலுகையில் 84,999-க்கு அமேசான் தளத்தில் வாங்கலாம்.

சிறந்த சலுகைகளையுடைய ஸ்மார்ட்போன்கள் என்னென்ன?

சாம்சங் கேலக்ஸி எஸ் 24

  • 6.2 அங்குல அமோலிட் திரை

  • ஸைனோஸ் 2400 புராசஸர்

  • 4000 mAh பேட்டரி திறன், 25W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 1,34,999

  • சலுகை விலை : ரூ. 84,999

ஐ-போன் 15

  • 6.1 அங்குல ஒஎல்இடி திரை

  • ஆப்பிள் ஏ16 பையோனிக் புராசஸர்

  • 3349 mAh பேட்டரி திறன் 15W வையர்லஸ் சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை ரூ. 69,900

  • சலுகை விலை ரூ. 57,749

ஒன்பிளஸ் 13ஆர் 5ஜி

  • 6.78 அங்குல அமோலிட் திரை

  • ஸ்நாப்டிராகன் 8 3ஆம் தலைமுரை புராசஸர்

  • 6000 mAh பேட்டரி, 80W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 44,999

  • சலுகை விலை : ரூ. 39,999

ஐகியூ நியோ 10ஆர்

  • 6.78 அங்குல அமோலிட் திரை

  • ஸ்நாப்டிராகன் 8எஸ் 3ஆம் தலைமுறை புராசஸர்

  • 6400 mAh பேட்டரி திறன் 80W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 31,999

  • சலுகை விலை : ரூ. 24,999

ஷாவ்மி 14 சிவி

  • 6.55 அங்குல அமோலிட் திரை

  • ஸ்நாப்டிராகன் 8எஸ் 3ஆம் தலைமுறை புராசஸர்

  • 4700 mAh பேட்டரி திறன், 67W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 54,999

  • சலுகை விலை : ரூ. 32,999

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4

  • 6.67 அங்குல அமோலிட் திரை

  • ஸ்நாப்டிராகன் 695 5ஆம் தலைமுறை புராசஸர்

  • 5110 mAh பேட்டரி திறன், 80W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 20,999

  • சலுகை விலை : ரூ. 15,999

சாம்சங் கேலக்ஸி எம் 35

  • 6.6 அங்குல அமோலிட் திரை

  • ஸைனோஸ் 1380 புராசஸர்

  • 6000 mAh பேட்டரி திறன், 25W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 24,499

  • சலுகை விலை : ரூ. 13,999

ரியல்மீ நார்சோ 80எக்ஸ்

  • 6.72 அங்குல எல்சிடி திரை

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6100 புராசஸர்

  • 6000 mAh பேட்டரி திறன், 45W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 15,999

  • சலுகை விலை : ரூ. 11,999

டென்னோ பாப் 9

  • 6.6 அங்குல எல்சிடி திரை

  • மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர்

  • 5000 mAh பேட்டரி திறன், 18W சார்ஜிங் திறன்

  • நிர்ணய விலை : ரூ. 8,499

  • சலுகை விலை : ரூ. 5,490

அமேசான் இணைய விற்பனைத் தளம் வழங்கியுள்ள இந்த சலுகையுடன் மேலும் சில சலுகைகளைச் சேர்த்துப் பயன்பெற முடியும். தொடர்புடைய பிற சலுகைகள்:

வங்கிகள் வழங்கும் சலுகைகள்...

மேற்கண்ட ஸ்மார்ட்போன்களை அமேசான் தளத்தில் வாங்கும்போது வங்கிகள் வழங்கும் உடனடிச் சலுகைகளை ஸ்மார்ட்போன்களின் விலையின் கீழேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் தெரிந்துகொள்ளலாம்.

அமேசானில் கோடை கால சலுகைகளைப் பொருத்தவரையில் எச்டிஎஃப்சி வங்கி கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மூலம் வாங்கினால் 10% தள்ளுபடி உண்டு. அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு உடையவர்களுக்கு 5% தள்ளுபடி உண்டு.

பழைய ஸ்மார்ட்போன்கள் மாற்றம்

உங்களிடமுள்ள பழைய ஸ்மார்ட்போன்களை அமேசானிலேயே விற்று, புதிய ஸ்மார்ட்போனை பெறுவதன் மூலம் கூடுதல் சலுகைகளைப் பெற முடியும்.

கால நிர்ணய சலுகை

அமேசான் நிறுவனம் ஏதேனும் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் (உதாரணம்: இரவு 8 - 9 மணி ) சிறப்புச் சலுகையில் உடனடி விற்பனையை அறிவிக்கும். அதில் ஒருசில பிராண்டுகளுக்கு சில நிமிடங்களுக்கு மட்டும் கூடுதல் சலுகை இருக்கும். இதனை அமேசான் விளம்பரங்கள் மூலம் முன்கூட்டியே அறிந்துகொள்ளலாம்.

சலுகை கூப்பன்கள்

இணைய விற்பனை தளத்தில் ஒருசில பொருள்களுக்கு கூப்பன்களை அமேசான் அறிவித்திருக்கும். பொருள்களை வாங்கும்போது கூப்பன்கள் தானியங்கியாக விலையில் பிரதிபலிக்காது. அதனை அறிந்து, கூப்பன்களை சரியாகப் பயன்படுத்தி கூடுதல் சலுகைகளைப் பெறலாம்.

மற்ற விற்பனைத் தளங்கள்

அமேசான் விற்பனை தளத்தின் பொருள்களை மற்ற இணைய விற்பனை தளங்களான ஃபிளிப்கார்ட், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ் உள்ளிட்ட பல தளங்களில் ஒப்பீடு செய்து பார்த்துக்கொள்வது லாபம் அளிக்கலாம். குறைந்த விலை எங்கே உள்ளதோ, அதனைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

அமேசான் பிரைம்

அமேசான் இணைய விற்பனைச் செயலியில் பிரைம் உறுப்பினராக இருந்தால், அவர்களுக்கு முன்னதாகவே இந்த சலுகைகள் பொருந்தும். அதனால், சலுகை முடிவதற்குள் பொருள்களைத் தேர்வு செய்து பயன்பெறலாம்.

இதையும் படிக்க | ஐ-போன்களுக்கு இந்தியாவில் வரவேற்பு கிடைப்பது ஏன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com