எஸ்பிஐ வெகுமதி புள்ளிகள் என்ற பெயரில் எஸ்எம்எஸ்! ஏமாற வேண்டாம்!!

எஸ்பிஐ வங்கி வெகுமதி புள்ளிகள் என வரும் எஸ்எம்எஸ் மூலம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
எஸ்பிஐ வங்கி
எஸ்பிஐ வங்கி
Published on
Updated on
1 min read

வங்கிகளில் பணம் வரவு வைக்கப்பட்டாலோ அல்லது ஏடிஎம் உள்ளிட்டவற்றின் மூலம் பணம் எடுக்கப்படுவது மற்றும் பணப்பரிமாற்றம் செய்வது தொடர்பான தகவல்கள்தான் பெரும்பாலும் எஸ்எம்எஸ் மூலம் வரும்.

ஆனால், வங்கிகளின் பெயர்களில் மோசடியாளர்கள் எஸ்எம்எஸ் மூலம் தவறான தகவல்களைப் பரப்பி மக்களை ஏமாற்றும் நடவடிக்கை நாள்தோறும் நடந்துகொண்டே இருக்கிறது.

இதில் முக்கியமானது எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தியவர்களுக்கு வழங்கப்படும் ரிவார்டு எனப்படும் வெகுமதி புள்ளிகள் பெயரில் நடக்கும் மோசடி.

மோசடியாளர்கள், சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்து, ஸ்டேட் வங்கியின் ரிவார்டு பாயிண்ட்ஸ் பற்றி பொய்யான செய்திகளை அனுப்புகிறார்கள்.

இந்த எஸ்எம்எஸ் போன்றவை உண்மை என நம்பும் மக்களைத் தொடர்புகொண்டு மோசடியாளர்கள் உருவாக்கிய போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறு வலியுறுத்துகிறார்கள்.

இல்லாவிட்டால், வாட்ஸ்ஆப்களில், முகப்பு புகைப்படத்தில் ஸ்டேட் வங்கியின் லோகோவை வைத்து மக்களுக்கு வெகுமதி புள்ளிகள் குறித்து செய்தி அனுப்புகிறார்கள். அதற்கு பதிலளிப்பவர்களுக்கு செயலியின் லிங்க் அனுப்பி அதனை டவுன்லோடு செய்யச் சொல்கிறார்கள்.

இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ததும், செல்போன் ஹேக் செய்யப்படுகிறது. அந்த செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் நடைபெறும். பிறகுதான், மக்கள் தாங்கள் எஸ்பிஐ வெகுமதி புள்ளிகள் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.

தற்காத்துக் கொள்வது எப்படி?

சந்தேகத்துக்கு இடமான லிங்குகளை அழுத்தாமல் மற்றும் செயலிகளை பதிவிறக்காமல் இருப்பது.

எந்தவொரு வெகுமதி அல்லது நிதி சலுகையையும் அதிகாரப்பூர்வ வங்கி அல்லது சேவை வழங்குநருடன் நேரடியாக சரிபார்ப்பது.

சமூக வலைத்தளங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வைத்திருப்பது.

வங்கிக் கணக்குகளை வழக்கமாக சரிபார்ப்பது மற்றும் ரிவார்டு புள்ளிகளை எவ்வாறு அறிந்து கொள்வது என்பதை அறிந்து வைத்துக் கொள்வது.

வங்கியிலிருந்து என்று அழைப்பு வந்தாலே எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

சைபர் குற்றத்துக்கு இலக்காக வேண்டாம், தேவைப்படின் அழையுங்கள் உதவி எண் 1930.

இதுபோன்ற சைபர் மோசடி குறித்த புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். பண மோசடியாக இருப்பின், உடனடியாக புகார் அளித்தால் பணத்தை மீட்பது எளிதாகும்.

மேலும் பார்க்க... இணையவழி ஏமாற்றுகளிலிருந்துதற்காக்க...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com