ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

பயணிகள் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படும் ஒரே ரயில்!

பயணிகள் அனைவருக்கும் இலவச உணவு வழங்கப்படும் ஒரே ரயில் பற்றி...

News image

பிரதி படம் - ENS

Updated On :3 பிப்ரவரி 2026, 11:57 am IST

ஆச்சரியங்களும் பல வியப்புகளையும் நிறைந்திருக்கும் நம்நாட்டில், ஒரே ஒரு ரயிலில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் இலவச உணவு பரிமாறப்படுகிறது என்பதும் ஒன்றாக உள்ளது.

ஒரு சமூக மக்களின் தன்னார்வலர்களால், தங்கள் மாநிலத்துக்குள் வரும் ரயிலில் பயணிக்கும் அனைவருக்கும், சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் நல்ல சத்தான காய்கறிகளைக் கொண்ட உணவு வழங்கப்படுகிறது. அந்த ரயில் சச்கந்த் விரைவு ரயில். மகாராஷ்டிரத்தின் நன்டட் பகுதியிலிருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிருதசரஸை இணைக்கும் இந்த ரயிலில்தான் பல பத்தாண்டு கால சேவை மனப்பான்மையின் பாரம்பரியம் இன்றளவிலும் தொடர்கிறது.

சீக்கிய மதத்தினரின் மிக முக்கிய வழிபாட்டுத் தலங்களாக ஹசூர் சாஹிப் மற்றும் பொற்கோவிலை இணைக்கும் வகையில் சுமார் 2,000 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படுகிறது. எந்தக் கட்டணமும் இன்றி, பயணிகள் இருக்கும் இடத்துக்கே அவர்களுக்கான உணவு வந்தடைகிறது.

இந்த உணவை வழங்குவது ரயில்வே அல்ல. ஒரு சமூக மக்களின் தன்னார்வலர்களால் இயங்கும் அமைப்பு. குருத்வாரா மற்றும் தன்னார்வ அமைப்புகளால் உணவு தயாரிக்கப்படுகிறது. ரயில் நிலையங்கள் அல்லது அருகில் உள்ள குருத்வாராக்களில் மிகப்பெரிய அளவில் உணவு தயாரிக்கப்பட்டு பெட்டிகளில் அடைக்கப்பட்டு, ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது உணவு வழங்கப்படுகிறது.

நன்டட், போபால், புது தில்லி போன்ற மிகப்பெரிய ரயில் நிலையங்களில், தன்னார்வலர்கள் ரயிலுக்குள் ஏறி, பயணிகளுக்கு உணவுகளை வாங்குவார்கள். அதில், கிச்சடி, பருப்பு, ரொட்டி, காய்கறிகள் என சீரான உணவு இருக்கும். ஒவ்வொரு நாள் உணவு மெனுவும் அந்தந்த நாளுக்கும் பருவத்துக்கும் ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. நம்பிக்கையுடன் செய்யப்படும் சேவைக்கு இது மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது.

அது மட்டுமல்ல, ரயிலின் அனைத்துப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கும், எந்த மத, இன வேறுபாடின்றி உணவு வழங்கப்படுகிறது. உணவு பரிமாறப்படும்போது, ரயிலில் பயணிக்கும் அனைவரும் ஒன்றாக இணைந்து உணவருந்துகிறார்கள். அது அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் அதிகரிக்கிறது.

இந்தியாவிலேயே, பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் ஒரே ரயிலாக சச்கந்த் அமைந்துள்ளது. ஒவ்வொரு மத அமைப்புகளும், தன்னார்வலர் குழுக்களும் இணைந்து, இந்த சமுதாயத்தின் தேவையை தீர்ப்பதில் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதை பறைசாற்றுவதாக, உணவு வழங்கப்படுவது பார்க்கப்படுகிறது.

ஒருவேளை, இந்த ரயிலில் பயணித்து, தன்னார்வலர்கள் கொண்டு வரும் உணவு கிடைக்கப்பெற்றவர்கள், இதுபோன்ற ஒரு சேவையை செய்து வருபவர்களுக்கு நிச்சயம் தங்களது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்ள தவறுவதில்லை.

Summary

About the only train that offers free food to all passengers...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.