தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

புதிய செல்போனில் பழைய ஜிபே கணக்கு! ஆக்டிவ் செய்ய விதிமுறைகள்!

புதிய செல்போனில் பழைய ஜிபே செயலியை பதிவேற்றும்போது இருக்கும் விதிமுறைகள் பற்றி...

ஜிபே விதிமுறை - Express Illustrations

Published On :17 ஜூலை 2026, 1:46 pm IST

ஒருவர் புதிதாக செல்போன் வாங்கும்போது, அதில் பழைய செல்போனிலிருக்கும் தொடர்பு எண்களை மீட்டு, புதுப்பிப்பது, வாட்ஸ்ஆப் கணக்குகளை கொண்டு வருவது போன்றவை சற்று சவாலானதாக இருக்கலாம்.

அதுபோல, ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஜிபே செயலியை புதிய செல்போனில் பதிவேற்றும்போது சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதிருக்கும்.

வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டை புதிய செல்போனுக்கு நேரடியாக மாற்ற வேண்டும். பிறகு ஜிபேவை பதிவிறக்கம் செய்து, அதில் வங்கிக் கணக்கை ஆக்டிவ் செய்ய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து குறுஞ்செய்தியை (SMS) அனுப்புவதன் மூலம் ஜிபே, ஒருவரது அடையாளத்தைச் சரிபார்க்கிறது.

ஒருவேளை, சிம்கார்டு இல்லாமல் இருந்தாலோ, சிம் கார்டில் எஸ்எம்எஸ் செல்லும் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யப்படாவிட்டாலோ எஸ்எம்எஸ் அனுப்ப முடியாது. ஜிபேவை ஆக்டிவ் செய்ய முடியாது.

அடுத்து, எஸ்எம்எஸ் அனுப்பி, கணக்கை ஆக்டிவ் செய்ததும், உடனடியாக யாருக்கும் பெரிய தொகையை அனுப்ப முடியாது.

காரணம். 24 மணி நேர வரம்பு என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. ஒரு புதிய செல்போனில் பழைய ஜிபே கணக்கை பதிவிறக்கம் செய்து ஆக்டிவ் செய்து சரியாக 24 மணி நேரம் வரை வெறும் ரூ.5 ஆயிரம் மட்டுமே வேறு ஒரு கணக்குக்கு அனுப்ப முடியும். அதை விட பெரிய தொகையை அனுப்ப வேண்டும் என்றால் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

ஒரு நேரத்தில் ஒரே போன்

ஜிபே செயலியில், ஒரு வங்கிக் கணக்கை, ஒருவர் ஒரே நேரத்தில் ஒரே ஒரு செல்போனில் மட்டுமே பயன்படுத்த முடியும். புதிய செல்போனில் ஜிபேவை ஆக்டிவ் செய்ததும் பழைய செல்போனிலிருக்கும் ஜிபே செயலிழந்து போகும்.

லாக் வசதி

புதிய செல்போனில் ஜிபேவை திறக்க, பேட்டர்ன், பின் எண் அல்லது கைரேகை வைத்து திறக்கும் வாய்ப்பு வழங்கப்படும். அதில் சிறந்ததை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

Summary

Using your old GPay account on a new mobile phone! Guidelines for activation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.