பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்! அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

எண் மறைக்கப்பட்ட பாதுகாப்பான ஆதார் அட்டை - முழு விவரம்!

எண் மறைக்கப்பட்ட பாதுகாப்பான ஆதார் அட்டை பயன்படுத்துவது பற்றிய தகவல்கள்..

News image

ஆதார் அட்டை - சித்திரிப்பு படம்

Updated On :27 மே 2026, 5:50 pm IST

அடையாள ஆவணமாக ஆதார் எண் பயன்படுத்தும்போது பாதுகாப்பான முறையில் எண் மறைக்கப்பட்ட (மாஸ்க்டு) ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது நல்லது. எனவே மக்கள் மாஸ்க்டு ஆதார் அட்டை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

அனைத்தும் இன்று டிஜிட்டல் அல்லது எண்ம மயமாகிவிட்டது. இருந்த இடத்திலிருந்தே பல்வேறு பணிகளை நிறைவு செய்து கொள்ளலாம். எந்த சான்றிதழ், ஆவணமாக இருந்தாலும் டிஜிட்டல் முறையில் அளித்துவிடலாம் என்பதால், அதில் சில சிக்கல்களும் உள்ளன.

அடையாளச் சான்றிதழ் கேட்டதும் பலரும் ஆதார் விவரங்களைக் கொடுத்து விடுவார்கள். ஆனால், அதனை வைத்து பல மோசடிகள் நடக்கலாம் என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள்.

எனவே, ஆதார் ஆணையமானது மக்களுக்காக ஒரு பிரத்யேக வசதியை வைத்திருக்கிறது. எண் மறைக்கப்பட்ட அல்லது மாஸ்க்டு ஆதார் அட்டை என்ற அட்டையை மக்கள் டவுன்லோடு செய்து அதனை வெறும் அடையாளச் சான்றிதழ் கேட்கும்போது கொடுத்துவிடலாம்.

அது என்ன எண் மறைக்கப்பட்ட ஆதார் அட்டை?

ஒருவரது உண்மையான ஆதார் அட்டைப் போன்றே மாஸ்க்டு ஆதார் அட்டையும் இருக்கும். பெயர் இருக்கும், புகைப்படம் இருக்கும், அனைத்து விவரங்களும் இருக்கும். ஆனால் ஆதார் எண்ணின் முதல் 12 இலக்கங்களில் 8 இலக்கங்கள் மறைக்கப்பட்டு, கடைசி 4 இலக்கங்கள் மட்டும் தெரியும்படி இருக்கும்.

எனவே, இந்த மாஸ்க்டு ஆதார் அட்டையை ஆவணமாகப் பெற்றவர்கள், அதனைக் கொண்டு கடன் வாங்குவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட முடியாது. அதாவது, அடையாளங்களை உறுதி செய்யலாம், ஆனால், ஆதார் எண்ணைக் காட்டாத வகையில் இந்த மாஸ்க்டு ஆதார் அட்டை இருக்கும்.

எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?

  • வெறும் அடையாளச் சான்றிதழ் மட்டுமே கேட்கும் இடத்தில் இந்த மாஸ்க்டு ஆதார் அட்டை கொடுக்கலாம்.

  • ஆன்லைன் சேவைகள் பெறும்போது இவற்றைக் கொடுக்கலாம்.

  • சில நிறுவனங்கள், மையங்களில், தொலைத் தொடர்பு சேவை பெறும்போது எண் மறைக்கப்பட்ட ஆதார் அட்டையைக் கொடுக்கலாம்.

  • செல்போன் செயலிகளில் பதிவு செய்யும்போது, இ-வணிக இணையதளத்தில் பதிவு செய்யும்போது அடையாளச் சான்றிதழ் கேட்டால் இதுவே போதுமானது.

எண் மறைக்கப்பட்ட ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?

இதுவரை எண் மறைக்கப்பட்ட ஆதார் அட்டை இருக்கும் வசதி தெரியாதவர்கள் இனி அதனை தெரிந்துகொண்டு தேவைப்படும் இடங்களில் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

இ-ஆதார் இணையதளம் அல்லது ஆதார் ஆணைய இணையதளத்திலிருந்து மிக எளிதாகவே இதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆதார் ஆணையத்தின் uidai.gov.in இணையதளத்துக்குச் செல்லவும்.

அதில், டவுன்லோடு ஆதார் என்பதை கிளிக் செய்து கெட் ஆதார் என்பதை தெரிவு செய்யவும்.

பிறகு வரும் படிவத்தை சரியாக நிரப்பவும்.

பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு ஓடிபி பெறவும்.

அப்போது மாஸ்க்டு ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்து சப்மிட் கொடுத்தால், உங்கள் எண் மறைக்கப்பட்ட மாஸ்க்டு ஆதார் அட்டை பிடிஎஃப் வடிவில் கிடைக்கப் பெறும்.

உங்களுக்கு டிஜிலாக்கரில் கணக்கு இருந்தால், இதே நடைமுறைகளைப் பயன்படுத்தி, அந்தக் கணக்கிலும் மாஸ்க்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.

செல்போனில் டிஜிலாக்கர் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொண்டு அதிலும் பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் மோசடிகள் நாள்தோறும் அரங்கேறி வரும் நிலையில், ஒருவரது ஆதார் எண்ணை வைத்து பல மோசடிகள் நடைபெறலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள். அனைவரும் தங்களது எண் மறைக்கப்பட்ட ஆதார் அட்டையைப் பயன்படுத்துவது மிகவும் நன்மை அளிக்கும்.

Summary

Secure Aadhaar Card with Hidden Number - Full Details!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.