ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அபாரம்!

முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அபாரம்!
@TheHockeyIndia
Published on
Updated on
1 min read

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே பிகார் மாநிலம் ராஜ்கிர் விளையாட்டுத் திடலில் இன்று(நவ. 11) நடந்த ஆட்டத்தில், மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. சங்கீதா குமாரி 2 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ப்ரீத்தி துபே, உதிதா தலா ஒரு கோல் அடித்தனர்.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய மகளிர் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் நாளை(நவ. 12) தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com