தா னத்தில் சிறந்தது கண் தானம் எனக் கூறுவதுண்டு. ஆனால் கண் தானம் குறித்த போதிய விழிப்புணர்வு படித்தவர்கள் முதல் பாமரர் வரை இல்லை என கூற வேண்டும்.
இரு கண் இல்லாத ஒருவருக்கு ஒரு கண் வழங்குவதன் மூலம் அவரது வாழ்க்கையில் ஒளியேற்றி வைப்பதற்கு ஒப்பானதாகும். கண் தானம் மூலம் பார்வை கொடுப்பவர்கள் இறந்தும் வாழ்பவர்கள் எனக் கூறலாம்.
அத்தகைய கண் தானத்துக்கு, அரிமா, ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. இந்த நிலையில் இரு கண் பார்வையற்ற ஒருவர் கண் தானத்துக்காகப் பாடுபடுகிறார் என்பது ஆச்சரியமான செய்தியாகும்.
தன்னம்பிக்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். கணினியைப் பயன்படுத்துவது சமையல் செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்து அவர் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வடமலாபுரம் கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜி.ராஜசேகரன் (65) தன் இரு விழிகளின் பார்வையை இழந்தாலும், மற்றவர்கள் விழிகள் ஒளிபெற பாடுபட்டு வருகிறார்.
அவரை சந்தித்தபோது:
* உங்களுக்கு எந்தவயதில் எப்படி பார்வை போயிற்று?
கிட்டப்பார்வை காரணமாக எட்டு வயதில் கண் கண்ணாடி அணியத் தொடங்கினேன். பின்னர் படிப்படியாக பல காரணங்களால் கண்களைப் பரிசோதித்து வந்தேன். எனது 40-வது வயதில் கண்ணில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு அறுந்துவிட்டது. இனி பார்வை கிடைக்காது என டாக்டர்கள் கூறிவிட்டனர். மூளைக்குச் செல்லும் நரம்பு அறுந்துவிட்டதால், வேறு கண் பொருத்தினாலும் பார்வை வராது என டாக்டர்கள் கூறிவிட்டனர்.
* பின்னர் என்ன செய்தீர்கள்?
அப்போது நான் ஓசூரில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். பார்வை போய்விட்டதால் நான் மனம் ஒடிந்து போகவில்லை. அடுத்து என்ன செய்லாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருநாள் வானொலியில் பார்வையற்றவர்களும் ஆசிரியர் பணி செய்யலாம் என ஒலிபரப்பான செய்தி என்னுள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
இதையடுத்து நான் சென்னையில் உள்ள தேசிய பார்வையற்றவர்களின் கூட்டமைப்பின் அலுவலகம் சென்று, பார்வையற்றவர் எப்படி ஆசிரியர் பணிபுரியலாம் என யோசனை கேட்டேன்.
அவர்கள் கூறியபடி ஆசிரியர் பணி செய்து கொண்டே சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல்மூலம் பி.லிட், பி.எட், எம்.ஏ. தமிழ், பி.எட் ஆகிய படிப்புகளைப் படித்து, மேல்நிலைப் பள்ளிக்குத் தமிழாசிரியர் ஆனேன்.
2002 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம் பாகலூரில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். இதையடுத்து கோயம்புத்தூரில் உள்ள சர்வதேச ஊனமுற்றோர் மேம்பாட்டு மையத்தில் ஒரு ஆண்டு கணினிப் பயிற்சி பெற்றேன்.
* கண் தானத்தில் ஆர்வம் எப்போது எப்படி ஏற்பட்டது?
1989 ஆம் ஆண்டு எனது தந்தை எஸ்.கோபால்சாமி உயிரிழந்தார். அவர் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது தனது கண்களைத் தானம் செய்ய வேண்டும் எனக் கூறியதால், அப்போது மதுரையில் இருந்து டாக்டர்களை வரவழைத்து கண்களைத் தானமாக கொடுத்தோம்.
ஒருமுறை மதுரைக்கு செல்ல வேண்டியதிருந்தது. திருமங்கலம் பஸ் நிலையத்தில் பஸ் மாற வேண்டியதிருந்ததால், வேறு பஸ் மாறி இருக்கையில் அமர்ந்தேன். அருகில் ஒரு பெண் இருப்பது எனக்குத் தெரியவில்லை. உடனே அந்த பெண் சத்தம் போடத் தொடங்கினார்.
அம்மா நான் பார்வையற்றவன் எனக் கூறியும் அந்த பெண் சத்தம் போடுவதை நிறுத்தவில்லை. பின்னர் வேறு ஒரு இருக்கையில் அமர்ந்தேன். மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் சாலையைக் கடக்க யாரும் உதவி செய்யவில்லை. மிகவும் சிரமப்பட்டேன். இந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அன்று இரவு முழுவதும் எனக்கு உறக்கம் இல்லை.
தந்தை கண்தானம் செய்ததும், பார்வையில்லாதவர்கள் உலகில் எவ்வாறு சிரமப்படுகிறார்கள் என யோசித்து, பார்வையில்லாதவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் கண் தானம் பெற்று சிவகாசி அரிமா சங்கங்களுக்கு தகவல் கொடுக்கும் முயற்சியில் இறங்கினேன்.
இதுவரை 34 ஜோடி கண்களைத் தானமாகப் பெற்று கொடுத்துள்ளேன். இப்போது எங்கள் ஊரில் யார் இறந்தாலும் முதலில் எனக்குத்தான் தகவல் தருகிறார்கள். இந்தப் பணிக்கு ஆசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்ற எனது மனைவி ஜெயலட்சுமி மிகவும் உதவியாக உள்ளார்.
* உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் கண் தானம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எனவே மாணவர்கள் மத்தியில் பேசுவதற்கு கல்வித் துறை அதிகாரிகள் மூலம் உத்திரவு பெற்றுள்ளேன். காலாண்டுத் தேர்வுக்குப் பின்னர் இந்தப் பணியை ஆற்ற உள்ளேன்.
எனது உடலில் உயிர் உள்ளவரை கண் தானத்துக்குப் பாடுபடுவேன். மதுரை மருத்துவமனைக்கு எனது உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளேன் என்றார்.
பெட்டி செய்தி :
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல அரிமா சங்கங்கள் இவரது சேவையைப் பாராட்டியுள்ளன. மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இவரைப் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது.
இவருக்கு கட்டடக்கலைப் பொறியாளராகப் பணியாற்றும் கோபிநாத் என்ற மகனும், எம்.சி.ஏ. படித்த சியாமளா என்ற மகளும் உள்ளனர். இவரது தொலைபேசி எண் 04562-232635.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


