பயிற்சி: பொருளாதார வெளிச்சம் பரப்பும் "லாம்ப்'!
"இருட்டை குறைசொல்லிக் கொண்டிருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவது சிறந்தது' என்று சொல்வார்கள். அப்படி வசதி குறைந்தவர்களின் வாழ்வில் பொருளாதார ஒளி ஏற்றும் சேவையைச் செய்து வருகின்றது "ப்ஹம்ல்' (லிபரே


"இருட்டை குறைசொல்லிக் கொண்டிருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவது சிறந்தது' என்று சொல்வார்கள். அப்படி வசதி குறைந்தவர்களின் வாழ்வில் பொருளாதார ஒளி ஏற்றும் சேவையைச் செய்து வருகின்றது "ப்ஹம்ல்' (லிபரேஷன் அசோசியேஷன் ஃபார் மூவ்மென்ட் ஆஃப் பியூப்பிள்) என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
கொல்கத்தாவில் ஏறக்குறைய நாற்பது வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் வட இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் இந்நிறுவனத்தின் சென்னை கிளை இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. சென்னையில் பல இடங்களிலும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கி இருப்பவர்களுக்கு, மிகக் குறைந்த கட்டணத்தில் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட தொழிற் பயிற்சிகளை அளிக்கின்றனர்.
பெரும்பாலும் பெண்களின் பொருளாதாரத் தேவைகளைக் குறி வைத்து இத்தகைய பயிற்சிகளை அளித்துவரும் இந்நிறுவனத்தின் பொறுப்பாளர் ராமசுவாமியை சென்னை, சின்மயா நகரிலிருக்கும் "லாம்ப்' அலுவலகத்தில் சந்தித்தோம்...
""நான் டி.வி.எஸ். குழுமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பணி ஓய்வுக்குப் பின் என்னுடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், மற்றவர்களுக்குப் பயனுள்ள வகையிலும் அமைத்துக் கொள்ள முடிவு செய்தேன். சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதலே
"லாம்ப்
"லாம்ப்' தன்னார்வத் தொண்டு நிறுவனத்தோடு என்னை இணைத்துக் கொள்வதற்குக் காரணம்.
சென்னையில் வசிப்பவராக இருக்கவேண்டும். குடும்பத் தலைவரின் வருமானம் 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். குடும்பப் பின்னணி போன்றவைகளை விசாரிக்கிறோம். இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஒரு மாணவர் விரும்பும் தொழிற்பயிற்சியைப் பெறலாம். அதற்கான மிகக் குறைந்த கட்டணத்தை நாங்கள் பெற்றுக்கொண்டு பயிற்ச்சிக்கான முழுக் கட்டணத்தையும் லாம்ப் நிறுவனம் மூலம் அளிப்போம். கல்வி உதவித் தொகை, அவர் பயிற்சி பெறும் நிறுவனத்திற்கு நேரடியாக அளிக்கப்பட்டுவிடும். பயிற்சிக் காலம் முடிந்தவுடன் மாணவருக்கு தகுந்த சான்றிதழ் அளிக்கப்படும்.
தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி, அழகுக் கலை பயிற்சி, கார் ஓட்டும் பயிற்சி, கணிப்பொறியைக் கொண்டு அளிக்கப்படும் பல பயிற்சிகள், செல்போன் பழுதுகளைச் சரிபார்க்கும் பயிற்சி போன்ற பயிற்சிகளை அளிக்கிறோம்.
கணிப்பொறி பயிற்சிகளை சி.எஸ்.சி., நிறுவனத்திலும், நர்சிங் பயிற்சிகளை, கில்ட் ஆஃப் சர்வீஸ், திருவொற்றியூர் பகுதியில் இயங்கும் ரெகபூத் கல்வி அறக்கட்டளையிலும், கார் ஓட்டும் பயிற்சியைக் குளோபல் டிரைவிங் பள்ளியிலும் கற்றுக் கொடுக்கிறோம். தையற்கலை, அழகுக் கலை, நர்சிங் பயிற்சிகளைத் திருவொற்றியூர் ரெகபூத் கல்வி அறக்கட்டளையிலும், சின்மயா நகரில் செயல்படும் எங்களின் அலுவலகத்திலும் பயிற்சி அளிக்கிறோம்.
மீஞ்சூரிலிருந்து, திருவொற்றியூர் ரெகபூத் கல்வி அறக்கட்டளைக்கு வந்து நர்சிங் பயிற்சி பெற்ற சரண்யா என்னும் பெண் தற்போது அந்த கல்வி அறக்கட்டளையிலேயே பயிற்சி கொடுப்பவராக ஆகியிருக்கிறார்.
மூன்று மாத தையற்கலை பயிற்சிக்கு 250 ரூபாயும், மூன்று மாத நர்சிங் மற்றும் நோயாளிகள் பராமரிப்பு பயிற்சிக்கு 400 ரூபாயும், அழகுக் கலை பராமரிப்புக் கலை பயிற்சிக்கு 1300 ரூபாயும் குறைந்த கட்டணமாக வசூலிக்கிறோம். பொருளாதார ரீதியாக பெண்களும் தங்களின் குடும்பத்துக்கு உதவுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இதன் மூலம் குடும்பத் தலைவிகளுக்கும் படிப்பைத் தொடரமுடியாமல் இருப்பவர்களுக்கும் வருமானம் ஈட்டுவதற்கு உதவுகிறோம். மனதளவில் சிறிய பாதிப்புடன் இருப்பவர்களும் சிறிய வேலைகள் செய்வதின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை நவஜோதி அறக்கட்டளை சார்பாக ஏற்படுத்தித் தருகிறோம்...'' என்றார் ராமசாமி.
தொழிற்பயிற்சியை சமீபத்தில் முடித்திருக்கும் திவ்யா, ""நான் திருவொற்றியூரில் இருக்கும் ரெகபூத் கல்வி அறக்கட்டளையில்தான் லாம்ப்பின் உதவியுடன் நர்சிங் பயிற்சியை முடித்தேன். தற்போது திருவொற்றியூர் எஸ்.எஸ். மருத்துவமனையில் உதவி நர்ஸôக பணிபுரிகிறேன்'' என்றார்.
மனோ சாந்தி, ""நானும் திவ்யா படித்த அதே இடத்தில்தான் நர்சிங் பயிற்சியை லாம்ப்பின் உதவியுடன் முடித்தேன். முடித்த சில நாட்களிலேயே எனக்கு, திருவொற்றியூர் ஈ.என்.டி. மருத்துவமனையில் உதவி நர்சாக வேலை கிடைத்தது. தற்போது நான் மாதம் 3000 ரூபாய் சம்பாதிக்கிறேன்'' என்றார் முகத்தில் மகிழ்ச்சி வெளிச்சம் ஜொலிக்க!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...