ஒரு வீட்டில் அண்ணன், தம்பி இருவரும் வெவ்வேறு கட்சியில் இருக்கலாம். ஒரு தம்பதிக்கு பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் விருப்பங்கள் விதவிதமாக இருக்கலாம். ஒரு கொடியில் பூக்கும் மலர்களின் மணம் கூட வேறு வேறாக இருக்கலாம். ஆனால், ஒரே வீட்டில் அக்காவும், தம்பியும் தேசிய அளவிலான இறகுப் பந்து விளையாட்டு வீரர்கள் என்பது வித்தியாசமானதுதான்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பி. சிவகுமார்-கல்பனா தம்பதியின் மகள் எஸ். தர்ஷினி, மகன் எஸ். பவுன்சரத் இருவரும் இறகுப் பந்து விளையாட்டில் தேசிய அளவிலான வீரர்கள் ஆவர்.
இறகுப் பந்து விளையாட்டுக்குச் சுறுசுறுப்பு தேவை என்றாலும், உடல் ஆரோக்கியத்தையும், சவால்களை எதிர்கொள்ளும் திறமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். 40 நிமிடம் விளையாடினால், மைதானத்தில் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் ஓடியதற்கு சமம். எனவே, இந்த விளையாட்டுக்கு உடல் தகுதி மிக அவசியம்.
இது குறித்து தர்ஷினியிடம் பேசினோம்.
இறகுப் பந்து விளையாட்டைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?
உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்பதால், இறகுப் பந்து விளையாட்டைத் தேர்ந்தெடுத்தேன். மேலும், எதிராளியின் பந்தை சமாளிப்பதில் சாமர்த்தியத்தை வெளிப்படுத்தவேண்டும். மற்ற விளையாட்டுக்களைக் காட்டிலும் இது சவாலான விளையாட்டு.
இந்த விளையாட்டில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
எனது பெற்றோர்கள் விளையாடும்போது பார்த்துக் கொண்டிருந்ததால், எனக்கும் ஆர்வம் ஏற்பட்டு நானும் விளையாடிப் பார்த்தேன். இதில், ஓடி ஆடி விளையாடுவது பிடித்து இருக்கிறது.
ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பயிற்சி செய்வீர்கள்?
காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் இரண்டு மணி நேரமும் பயிற்சி மேற்கொள்கிறேன்.
முதன்முதலில் எந்த ஆண்டு வெற்றி பெற்றீர்கள்?
2005-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்று, தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்றேன்.
மாநில அளவில் எத்தனை போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளீர்கள்?
ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டி என மொத்தம் 16 போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளேன். 6 தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டுள்ளேன்.
2008-ம் ஆண்டு சிவகாசியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியின்போது காலில் காயம் ஏற்பட்டது. பின்னர், 8 மாதம் ஓய்வுக்குப் பின்னரே விளையாடத் தொடங்கினேன். இறுதியாக, காமராஜர் பல்கலைக்கழக அளவிலான போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன்.
உங்களது பயிற்சி முறைகள் பற்றி...?
தினமும் காலை ஒரு மணி நேரமும், மாலை இரண்டு மணிநேரமும் பயிற்சி எடுத்து வருகிறேன். தேசிய பயிற்சியாளர் கூறும் அட்டவணைப்படி பயிற்சி பெறுகிறேன்.
உங்களால் மறக்கமுடியாத போட்டி எது?
2007-ம் ஆண்டு மாநில அளவில் சீனியர் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றது மறக்க முடியாததாகும்.
படிப்பையும், விளையாட்டையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?
எனது பெற்றோர் விளையாட ஊக்கமளிக்கிறார்கள். பாடங்களைப் பொருத்தவரை ஒரு முறை படித்தால் மனப்பாடம் ஆகிவிடும். தற்போது, கல்லூரியில் பி.பி.ஏ.
படித்து வருகிறேன். வகுப்பில் முதல் 5 நபர்களில் நானும் ஒருத்தியாக இருப்பேன்.
விளையாட்டு உங்களுக்கு எதிராக போய்க் கொண்டிருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
ஏதாவது செய்து வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் இருப்பேன். சோர்ந்து போகமாட்டேன்.
மற்ற விளையாட்டுகளைப் போல இந்த விளையாட்டுக்கு வரவேற்பு உள்ளதா?
பொது மக்களிடம் இதற்குப் போதிய வரவேற்பு இல்லை என்பதுதான் உண்மை. இந்த விளையாட்டில் பயிற்சி பெறவும், பேட், பந்து வாங்கவும் அதிகமாக செலவு ஆகும். இதில், தேசிய அளவில் முதலிடம் பெற்றாலும் பரிசுத் தொகை மிகவும் குறைவு. மத்திய-மாநில அரசுகள் இந்த விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பரிசுத் தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.
உங்கள் தம்பி பவன்சரத் குறித்து...?
இரட்டையர் போட்டிகளில் அதிகமாக வெற்றி பெற்றுள்ளார். எங்கள் இருவருக்கும் பெற்றோர் விளையாட்டிலும், படிப்பிலும் ஊக்கம் அளித்து வருவதால், எங்களுக்குள் எவ்விதப் பிரச்னையும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


