இந்தியப் படைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்களை அகற்றிடக் கோரி மணிப்பூரில் பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இரோம் ஷர்மிலா ஒரு பேட்டியில் கூறியவை:
வாழ்க்கையின் இத்தருணத்தில் நான் விரும்புவதை என்னால் செய்ய முடியாது. என் கையால் சாப்பிட முடியாது. என் புலன்களின் உணர்வுகளைப் பூர்த்தி செய்ய முடியாது. என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் நான் தாய்ப்பால் உண்ணும் குழந்தைபோல் இருக்கிறேன்.
சாப்பாட்டு முறையைத் தொடரவோ அதை என் கட்டுப்பாட்டில் வைக்கவோ, விரும்பியதை உண்பதோ, வேண்டும் என்றபோது உண்பதோ முடியாது. நான் கைதி. அதனால்தான் இந்தக் குழாய்கள் என் உடலில் புகுத்தப்படுவதை நான் தடுக்க முடியாது. எனக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி நான் அதிகம் ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. சிறை அதிகாரிகள் இதை என் மூக்கில் வற்புறுத்திப் புகுத்துகிறார்கள். அது பற்றியோ வேறு எது பற்றியோ நான் எதுவும் செய்ய முடியாது இப்போது.
நான்கு ஆண்டுகளாக நான் பல்கூடத் துலக்கவில்லை. ஆனால் நான் செய்வது மனநிறைவைத் தருகிறது. அது என் செயல் குறித்துக் கர்வம் கொள்ள வைக்கிறது. என்னால் சாப்பிடவோ, அருந்தவோ முடியவில்லை என்றாலும் என் கண்கள் நான் நினைப்பதைப் பார்க்கவில்லை என்றாலும் இவை எல்லாம் எனக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றாலும் நான் செய்வதில் உள்ள நிறைவு அதையெல்லாம் ஒன்றுமில்லாததாக்கி விடுகிறது.
அமைதியின் நறுமணம் என்கிற ஷர்மிலாவின் கவிதை நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில்: அம்பை
எங்க அப்பா கடை
எம். கருணாகரன், சென்னை.
""ஏம்மா எச்சில் துப்பும்போது பார்த்து துப்புறதில்லை? என் மேலே விழுந்திருச்சுப் பார்''
""பார்த்துத்தாம்மா துப்பினேன்''.
வேதாம்பாள் ஆத்மநாதன்,
புதுச்சேரி.
மாமியார் பேசினா லோக்கல் கால்,
மருமகள் பேசினா எஸ்.டி.டி. காலா?
அ.யாழினி பர்வதம்,
சென்னை-78.
பேராசிரியைக்கும் கல்லூரிக்குத் தாமதமாக வந்த ஒரு மாணவிக்கும் இடையேயான உரையாடல்:
""ஏன் லேட்?''
""ஒரு பையன் என்னைப் பின்தொடர்ந்து வந்தான் மேம்.''
""உன்னை என்ன செய்தான்?''
""என்னை ஒன்றும் செய்யவில்லை. மெதுவாக நடந்தான். அதான்.''
ரமேஷ், பொள்ளாச்சி.
(மதுரை மாவட்டத்தில் உள்ள சில மங்கலக் கிராமங்கள்)
அங்காடிமங்கலம், எட்டிமங்கலம், தனியாமங்கலம், சேர்ந்தமங்கலம், சாத்தமங்கலம், திருமங்கலம், நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம், பொன்னமங்கலம், கின்னிமங்கலம்.
எம்.வீ.மதுரைச்சாமி, கள்ளந்திரி.
""ஏன் டாக்டர் ஆபரேஷனைத் தள்ளி வைச்சுட்டீங்க?''
""எலெக்ஷன் வருதுல்ல, ஏன் ஒரு ஓட்டை வேஸ்ட் பண்ணணும்னுதான்''
மு.ஹ.அபூபக்கர், காயல்பட்டினம்.
நீதிபதி குழந்தை உரையாடல்:
நீதிபதி: உன்னுடைய பெற்றோர்கள் பிரிந்துவிட முடிவு செய்துவிட்டார்கள். நீ உன் அம்மாவோடு செல்ல விரும்புகிறாயா?
சிறுமி: இல்லை. அவர் அடிப்பார்.
நீதிபதி: அப்படியானால் உன் அப்பாவோடு செல்ல விரும்புகிறாயா?
சிறுமி: இல்லை. அவரும் அடிப்பார்.
நீதிபதி: சரி... யாரோடுதான் செல்ல விரும்புகிறாய்?
சிறுமி: இந்திய கிரிக்கெட் டீமோடு. அவர்கள்தான் எப்போதும் அடிக்கமாட்டார்கள்.
வினோத், சென்னை.
பீஸ் வாங்காத டாக்டரும் கிடையாது.
பீஸ் போகாத பல்பும் கிடையாது!
என்.கோதண்டராமன், மதுராந்தகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.