பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பயிற்சி: மூழ்காத ஷிப்!

கல்லூரி வாழ்க்கை என்றாலே கொண்டாட்டம்தான். ஆனால் இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாக் கல்லூரி மாணவர்களுக்கும் கிடைக்குமா என்றால், கேள்விதான். எப்போதும் படிப்பு.. படிப்பு.. என்று இருக்கும் சில கல்லூரி மாணவர்கள

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 9:37 pm

ரவிக்குமார்

கல்லூரி வாழ்க்கை என்றாலே கொண்டாட்டம்தான். ஆனால் இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாக் கல்லூரி மாணவர்களுக்கும் கிடைக்குமா என்றால், கேள்விதான். எப்போதும் படிப்பு.. படிப்பு.. என்று இருக்கும் சில கல்லூரி மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியொரு கல்லூரி வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் மரைன் ஸ்டடிஸ்! தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வந்திருக்கும் மாணவர்கள், ஒரு மரத்துப் பறவைகளாய் இங்கு கூடி "மூழ்காத ஷிப்பே ஃபிரண்'ட்ஷிப்தான்' என்கின்றனர்!

 மரைன் ஸ்டடிஸ் சொல்லிக் கொடுக்கும் கல்லூரிகள் இந்தியா முழுவதும் பல இருந்தும், இந்த நிறுவனத்தின் கல்லூரியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட சில மாணவர்கள் தங்கிப் படிப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏறக்குறைய நீளம் 90 அடி, அகலம் 62 அடி, உயரம் 50 அடியில் பிரம்மாண்டமான ஒரு கப்பல் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் மரைன் ஸ்டடிஸில்' நிற்கின்றது. முகப்பில் பெரிய புரோபெல்லர். கப்பலுக்குள்ளே பெரிய பெரிய என்ஜின்கள். கண்ட்ரோல் ரூம்... இதுதான் காரணம்!

 ""மரைன் படிப்பு சார்ந்த பயிற்சிகளை நிஜக் கப்பலின் பாகங்களோடு தொட்டுப் பழகி, பயிற்சி பெறும் வாய்ப்பை இந்த நிறுவனத்தில்தான் பெறமுடிகிறது. அதனால்தான் பல மாநிலங்களிலிருந்தும் வந்து இங்கு படித்துக் கொண்டிருக்கிறோம்'' என்றனர் நாட்டிகல் பயிற்சி பெறும் மாணவர்களில் சிலர்.

 நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். நாம் இந்தக் கப்பல் மூலத்தை தெரிந்து கொள்ள, சென்னையை அடுத்துள்ள தாழம்பூரிலிருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மரைன் ஸ்டடிஸின் இயக்குநர் கோவிந்தராஜனைச் சந்தித்தோம்.

 ""பி.எஸ்ஸி. நாட்டிகல் சயன்ஸ், பி.இ., மரைன் என்ஜினீயரிங் படிக்கும் வசதிகள் இந்த நிறுவனத்தில் இருக்கின்றன. எங்களிடம் படிப்பவர்கள் கப்பலை தலைமையேற்று நடத்தும் ஆபீஸராகவும் ஆகலாம். வணிகக் கப்பல்களைச் செலுத்தும் பொறியாளராகவும் ஆகலாம்.

 பி.இ. மரைன் ஸ்டடிஸ் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களில் இன்றைக்குப் பெரும்பாலும் எல்லா நிறுவனங்களிலுமே ட்ரெய்னிங் ஷிப் ஒன்றை கல்லூரி வளாகத்தில் நிர்மாணிக்கவேண்டும் என்பது இந்திய அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் மரைன் ஸ்டடிஸ் படிக்கும் மாணவர்களைத் துறைமுகத்திலிருக்கும் கப்பலுக்கு அழைத்துச் சென்றுதான் நேர்முகப் பயிற்சிகளை அளிப்பார்கள். இந்த ட்ரெய்னிங் ஷிப்களில் பயிற்சியளிப்பது ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலிருந்து மும்பையில்தான் நடந்துவந்திருக்கிறது.

 நமக்குக் கிடைத்த தகவல்களின்படி டஃபரின் என்னும் ட்ரெய்னிங் ஷிப் 1927 முதல் 1972 வரை பயன்பாட்டுக்கு இருந்தது. அதன்பின் டி.எஸ்.ராஜேந்திரா என்னும் கப்பல் 1972 முதல் 1994 வரை ட்ரெய்னிங் ஷிப்பாக நீடித்தது. கப்பல்களுக்குப் பதில், டி.எஸ்.சாணக்யா என்னும் ட்ரெய்னிங் பேûஸ மும்பையில் நிரந்தரமாக சிலகாலம் வைத்திருந்தனர்.

 தொடர்ந்து ட்ரெய்னிங் ஷிப்களுக்கு அளிக்கப்

 படும் பாதுகாப்பைத் தொடர முடியாமை போன்ற காரணங்களால் 2004-ல் மரைன் கல்வி அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கான ட்ரெய்னிங் ஷிப்களை அவர்களின் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமைத்திருக்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்தியது. அப்படி அமைத்தால்தான் அவர்களுக்கு மரைன் கல்லூரிக்கான அனுமதி கிடைக்கும் என்ற நிலை உருவாகியது. இந்த அறிவிப்பையொட்டி இந்தியாவிலேயே முதன் முதலாக முழுக்க முழுக்க ஸ்டீல் கொண்டு 2005-ல் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மாதிரிக் கப்பல் என்னும் பெருமையைப் பெற்றிருக்கும் மரைன் கல்வி நிறுவனமாக வேல்ஸ் திகழ்கிறது. இதற்கு எங்கள் நிறுவனரான டாக்டர் ஐசரி கே. கணேஷின் வழிநடத்துதல் முக்கியக் காரணம்.

 இந்தக் கப்பலுக்கான டிசைனை நான் வடிவமைத்தேன். இந்தக் கப்பலுக்கான முக்கிய பாகங்கள் நிஜமான பெரிய கப்பலிலிருந்து கொண்டுவரப்பட்ட பாகங்கள் என்பது முக்கியமான விஷயம்.

 உலக அளவில் கப்பலை தொழில்நுட்ப ரீதியாக உடைப்பதில் முதல் இடம் இந்தியாவிலிருக்கும் குஜராத்திற்கு உண்டு. அங்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் கோலோச்சிய "சன்ஸ்டிரக்' என்னும் கப்பல் உடைப்பதற்காக வந்திருந்தது. அந்தக் கப்பலிலிருந்து இயங்கும் திறனுள்ள முக்கிய என்ஜின்கள், கொடிமரம், புரோபெல்லர்கள், கப்பலின் முகப்பு போன்றவற்றை எடுத்து வந்தேன். நிஜக் கப்பலையே மாணவர்களுக்கு "வேல்ஸ் எக்ஸலன்ஸ்' என்னும் பெயரில் அளித்திருக்கிறோம். இதில் மாணவர்களுக்கான பாதுகாப்பு சாதனங்கள் உள்பட அனைத்தையும் உறுதி செய்திருக்கிறோம்'' என்றார் புன்னகையுடன்.

 ""இங்கு டி.எம்.இ. இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மரைன் என்ஜினியரிங் இருந்தாலும், நிஜக் கப்பலின் பாகங்களோடு பணிபுரியும் வாய்ப்பு இங்குதான் இருக்கிறது. அதனால்தான் இங்கு படிக்கிறேன்'' என்றார் தூத்துக்குடியிலிருந்து வந்திருக்கும் மாணவரான கெபின்.

 ""முழுக்க முழுக்க ஸ்டீல் கேம்பஸில் ஒர்க் செய்யும் வாய்ப்பு இங்கிருப்பதால்தான் மகாராஷ்டிராவிலிருந்து இங்கு வந்து படிக்கிறேன்..'' என்றார் ஹர்ஷத் செüனானே.

 படங்கள்: யு.கே.ரவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.