பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வெளிநாட்டு ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு!

என்னுடைய அன்னை வசுந்தரா ராஜகோபாலனையே முதல் இசை குருவாகக் கொண்டது, எனக்குக் கிடைத்த கொடுப்பினை..'' என்கிறார் கர்நாடக இசைப் பாடகி நிஷா ராஜகோபாலன். அன்னையைத் தவிர்த்து, ""டி.ஆர்.சுப்பிரமணியம், சுகுணா வரத

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:43 pm

ரவிக்குமார்

என்னுடைய அன்னை வசுந்தரா ராஜகோபாலனையே முதல் இசை குருவாகக் கொண்டது, எனக்குக் கிடைத்த கொடுப்பினை..'' என்கிறார் கர்நாடக இசைப் பாடகி நிஷா ராஜகோபாலன். அன்னையைத் தவிர்த்து, ""டி.ஆர்.சுப்பிரமணியம், சுகுணா வரதாச்சாரி, பி.எஸ்.நாராயணசுவாமி போன்ற இசை மேதைகளின் சிட்சை இன்னொரு கொடுப்பினை'' என்கிறார் நிஷா. அவரிடம் பேசியதிலிருந்து...

""வெளிநாட்டு ரசிகர்களுக்கு அதிகம் கச்சேரி கேட்பதற்கு வாய்ப்பு இல்லாததால் அவர்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். நாங்கள் கச்சேரிக்காக வெளிநாட்டிற்குப் போகும்போது, எங்களை உபசரிப்பதில் அவர்கள் மிகவும் பெருமைப்படுவார்கள். ஒருசில ரசிகர்கள், இன்றைய கச்சேரியில் நிச்சயமாக நீங்கள் இந்தப் பாட்டைப் பாடவேண்டும். அதற்காகத்தான் நாங்கள் ஐந்து மணிநேரம் பயணம் செய்து வந்திருக்கிறோம் என்பார்கள். 

அன்பைப் பொழிவார்கள்!

நான் கற்றுக் கொண்டது இன்றைக்கும் கற்றுக் கொண்டிருப்பது எல்லாமே குருவின் நேரடிப் பார்வையில்தான். பக்கத்துத் தெருவிலேயே குருவை வைத்துக் கொண்டு இன்டர்நெட்டில் இசை கற்றுக் கொள்வதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. ஆனால் தூர தேசத்தில் இருப்பவர்களும், ஒரு குருவிடம் இருந்து நேரடியாக கற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாதவர்களும் இன்டர்நெட்டின் மூலம் இசை கற்றுக் கொள்வதும் ஒரு வரப்பிரசாதம்தான்.

என்னுடைய குருவான இசை மேதை பி.எஸ். நாராயணசாமி எனக்கு "நிரவல்' நுணுக்கங்களை எல்லாம் சொல்லித் தந்திருக்கிறார். "நான் உனக்குச் சொல்லித் தருவதை, உன்னுடைய குரல் வாகு, தகுதி அறிந்து பாடு' என்பார். குரு-சிஷ்ய பாரம்பரியத்தில் வந்த

எண்ணற்ற கலைஞர்கள் இன்றைக்கு தமக்கென தனி முத்திரைகளைப் பதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்றார்.

அட்டை வண்ணப்படம் : ப.ராதாகிருஷ்ணன்    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.