தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாயா எனும் மந்திரம்

இந்திய பெண் குழந்தையைத் தத்தெடுத்த தனிமைப் பெண்ணான ஜேன் கிளார்க் அனுபவம் இது. ஜேன் லண்டனில் ஊட்டச்சத்து அறிவியலாளராக இருக்கிறார். ஊட்டசத்து குறித்து நூல்களும் எழுதி வருகிறார். ""தமிழ்நாடு விருந்தினர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:03 am

பூா்ணிமா

இந்திய பெண் குழந்தையைத் தத்தெடுத்த தனிமைப் பெண்ணான ஜேன் கிளார்க் அனுபவம் இது. ஜேன் லண்டனில் ஊட்டச்சத்து அறிவியலாளராக இருக்கிறார். ஊட்டசத்து குறித்து நூல்களும் எழுதி வருகிறார்.

""தமிழ்நாடு விருந்தினர் மாளிகையிலிருந்து கேரளா செல்ல என்னுடைய எட்டு வயது மகள் மாயாவுடன் காரில் புறப்பட்டேன். அவளுக்கு யானை சவாரி செய்ய வேண்டுமென்று ஆசை. மழை பெய்துகொண்டிருந்ததால் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. மணிக்கு 5 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்ல முடியவில்லை. எல்லை அருகே சென்றபோது இதுவரை நான் பார்த்திராத வகையில் மிகப்பெரிய "க்யூ' நின்றிருந்தது.

இந்தியாவில் இரவில் பயணம் செய்வது உண்மையிலேயே ஆபத்தானது என்று சொல்லப்பட்டிருந்தது. இருட்டுவதற்குள் திரும்ப வேண்டுமென்று நினைத்தேன். வழியில் எங்கும் டாய்லெட் செல்ல வசதியில்லை என்பதால் தேவையான அளவு தண்ணீர் அருந்தவில்லை. மறைவு பிரதேசமும் இல்லை. நாவும் தேகமும் வறண்டிருந்தது.

"மாயா இறங்கி என்னுடன் வா' என்று கூறியபடியே காரில் இருந்து இறங்கி அவளை அழைத்துக்கொண்டு க்யூவின் முன்பகுதிக்குச் சென்றேன். முன்னால் நின்றிருந்தவரிடம் சொன்னேன், "உன்னிடம் கேட்பதற்குத் தயக்கமாக இருக்கிறது. நீ நீண்ட நேரமாக க்யூவில் நிற்கிறாய் என்பது தெரியும். என்னுடைய மகள் யானை சவாரி செய்வதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறாள். ஏறக்குறைய ஆறு மணி நேர பயணத்திற்குப் பின்பு இங்கு வந்திருக்கிறோம். நான் உன்னுடைய இடத்தில் நிற்க அனுமதிப்பாயா?' என்று கேட்டேன். அந்த நபர் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. மகிழ்ச்சியுடன் உதவுவதாக கூறி எங்களை அனுமதித்தார். அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மாயா அவள் விரும்பியபடி யானை சவாரி செய்தாள்.

நான் அவளைத் தத்தெடுத்த நாள் நன்றாக நினைவில் உள்ளது. தனி பெண்ணாக வசிக்கும் எனக்கு தத்தெடுக்க வேண்டுமன்ற ஆசை தோன்றியபோது, அநாதை இல்லங்களிலும் அலுவலங்களிலும் தூதரங்களிலும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.

மாயாவை நானே புனே அநாதை இல்லமொன்றில் தத்தெடுத்தபோது அவளுக்குப் பதினைந்து மாதங்கள் நிரம்பியிருந்தன. தத்தெடுப்பதென்பது இந்தியாவில் மிகவும் சிரமமான விஷயம். இப்போது விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. நான் இங்கிலாந்தைச் சேர்ந்தவள். குடும்பம் இல்லை. தனியான பெண். ஆனால் நல்ல தாயாராக இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. என்னுடைய கடிதங்களுக்குச் சில அநாதை இல்லங்கள் பதிலளித்தன. ஒவ்வொரு முறையும் ஏமாந்ததுதான் மிச்சம். இறுதியில் ஓர் அநாதை இல்லம் தத்து அளிக்க சம்மதித்தது.

மாயாவை நான் முதன்முதலாக கைகளில் தூக்கியபோது ஐந்து மாத குழந்தையாக இருந்தாள். அவளது தாய் இறந்துவிட்டதால் அவளைக் கவனிக்க இயலாதென அவளது தந்தை அநாதை இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்தார். தலையைத் தூக்கக்கூட முடியாமல் மிகவும் நலிந்த நிலையில் 3.5 கிலோ எடை இருந்தாள்.

இப்போது மாயாவுக்கு எட்டு வயதாகிவிட்டதால் இந்திய வாழ்க்கையைப் பற்றி அவள் புரிந்து கொள்ளக்கூடிய பக்குவம் அடைந்துவிட்டதாகக் கருதினேன். டிசம்பர் மாதம் அதற்கேற்ப பருவமாகும். நான் ஒரு நியூட்ரிஷனிஸ்ட் என்பதால் என்னுடைய வாடிக்கையாளர்களில் பலர் என்னை கிறிஸ்துமஸ் சமயத்தில் ஒதுக்கிவிடுவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் புதிய புத்தகங்கள் எழுதுவேன். ஆனால் இந்த முறை யாருமே எனக்கு அறிமுகமில்லாத இதுவரை நான் சென்றிராத இடத்திற்குச் சென்று வர வேண்டுமென முடிவு செய்து தமிழகம் வந்தேன். ஏழாண்டுகளாக துவங்கிய பயணத்தில் நாங்கள் இருவர் மட்டுமே வெளிநாடு சென்றதுண்டு. இந்த முறை ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் இயற்கை சூழலில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா பகுதியைத் தேர்ந்தெடுத்தேன்.

நான் மாயாவைத் தந்தெடுத்த சமயத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார் நவீன். அவர் ஓர் இந்திய தொழிலதிபர்; நல்ல நண்பர். மூன்று குழந்தைகளுக்கு தந்தை. மாயா அவரை அப்பா என்றழைப்பாள். உண்மையில் நான் அவரை திருவனந்தபுரத்தில் ஓர் ஓட்டல் நீச்சல் குளத்தில் சந்தித்தேன். ஓர் இந்திய குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவதாக அவரிடம் சொன்னபோது தேவையான உதவிகளைச் செய்து தருவதாக சொன்னார். நான் மாயாவை தத்தெடுக்க முடிவெடுத்தபோது, அதற்கான விதிமுறைகளைச் செய்து முடிக்க பத்து மாதங்களாகும் என்பதால் நான் லண்டனுக்குத் திரும்பினேன். ஒவ்வொரு வாரமும் 12 மணி நேரம் பயணம் செய்து மாயா நலமாக இருக்கிறாளா என்று அந்த அநாதை இல்லத்திற்கு சென்று பார்த்து வருவார் நவீன். மாயாவின் முதற்கட்ட வாழ்க்கையில் ஒரு தந்தையாக, (இப்போது கூட இருவரும் மாதத்தில் ஒரு முறை பேசிக்கொள்வார்கள்) அவளுக்கு முக்கிய உறவாக இருந்தார். அவரைப் பார்க்க சென்றிருந்தபோது, துள்ளிக்குதித்துக்கொண்டு அவரிடம் ஓடினாள். அவளது உயரத்தைக்கண்டு நவீன் ஆச்சரியப்பட்டார்.

இதுவரை நான் அவளை எந்த அநாதை இல்லத்திலிருந்து அழைத்து வந்தேனோ அங்கு நாங்கள் இருவருமே திரும்பவும் சென்றதில்லை. எனக்கு ஏற்படும் உணர்வுகள் அவளுக்கும் ஏற்படக்கூடாது. அவளது வாழ்க்கை துவங்கிய அந்த அநாதை இல்லத்தை மீண்டும் போய் பார்ப்பதற்குப் பயமாக இருந்தது. மாயாவும் அதைப்பற்றி கேட்பதில்லை. ஒரு வேளை என்னுடை மனோபாவத்தை அவளும் கடைப்பிடிக்கிறாளோ என்னவோ? விடைகளை தெரிந்து கொள்ளும் பக்குவம் வரும்போதுதான் குழந்தைகள் கேள்விகளைக் கேட்கத் தொடங்குகிறார்கள். அடுத்த கேள்விகளைக் கேட்க அவர்கள் சற்று காலதாமதம் எடுத்துக் கொள்வதுண்டு. அப்போதுதான் அவர்களுக்குள் ஒரு முழுமையான கருத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்.

மாயாவின் கேள்விகள் எப்போது வேண்டுமானாலும் துள்ளிக் குதித்துக்கொண்டு வரும். தத்தெடுத்தல் குறித்து அவளிடம் விளக்க வேண்டுமென்று நினைப்பேன். அவள் மிகவும் சின்னவள்; உயரமான ஏழு வயது சிறுமி. நான் இந்தியாவுக்கு வந்து அவளைக் கண்டுபிடித்ததே ஒரு சுவையான கதைதான். மாயாவுக்கு நான்கு வயது இருக்கும்போது, ""என்னுடைய தந்தை எங்கே?'' என்று கேட்டாள். அம்மாவைப்பற்றிக் கேட்கவில்லை. அவளுடைய கண்களுக்கு நான்தான் அம்மா. அப்பா அம்மாவுடன் வரும் குழந்தைகளை அவள் பார்த்திருப்பதால் தன்னுடைய அப்பா எங்கே என்ற கேள்விதான் அவள் மனதில் தோன்றியது. நான் சொன்னேன், ""உன்னுடைய அப்பா இந்தியாவில் இருக்கிறார்''

""அப்படியானால் நான் ஏன் அவருடன் இல்லை?'' என்று கேட்டாள். ""அவரால் தனியாக உன்னைப் பார்த்துக்கொள்ள முடியாது'' என்றேன்.

இரண்டாண்டுகள் கழித்து நாங்கள் க்ரீஸ் நாட்டில் காரில் சென்று கொண்டிருந்தபோது எரிமலைகள் குறித்து அவளிடம் விளக்கிக் கொண்டிருந்தேன். அப்போது நல்ல இரவு நேரம். சுற்றிலும் கருமையாக இருந்தது. திடீரென மாயா கேட்டாள்,""என்னைப் பெற்ற அம்மா எங்கேயிருக்கிறாள்?'' எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் நான் சொன்னேன்,""நீ பிறந்தபோது உன்னுடைய அம்மாவுக்குத் திடீரென உடல் நலமின்றி போனதால் அவளால் உன்னை கவனித்துக்கொள்ள முடியாதென்பதால்தான் நீ என்னிடம் இருக்கிறாய்.''

மாயா கேட்டாள், ""உண்மையிலேயே அவளுக்கு உடல்நலமில்லையா? அல்லது இறந்துவிட்டாளா?'' நான் சொன்னேன்,""வருத்தமான விஷயம்தான். அவள் இறந்து போனாள்.''

மாயாவின் கேள்வி ஒரு டீன்-ஏஜ் பருவத்திற்குரியதாகவே இருந்தது. ""அவள் இறந்து போனாள் என்பது உனக்கு எப்படித் தெரியும்?'' ""நாங்கள் அனைத்து ஆவணங்களையும் கண்டுபிடித்து தகவல்களைச் சேகரித்து உறுதிபடுத்திக்கொண்ட பின்னரே எதிர்பாராத விதமாக அவள் இறந்து போனது தெரியவந்ததது'' என்றேன்.

பின்னர் அவளிடம் சொன்னேன்,""இருந்தாலும் நீ புத்திசாலியாக உண்மையான மகளாக இருக்கிறாய் என்பது அவளுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். ஏனெனில் அவளது ஆத்மா உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறது.''

மாயா கேட்டாள்,""உண்மையிலேயே அவளது ஆத்மா என்னை கவனித்துக் கொண்டிருக்குமென நினைக்கிறாயா?'' ""நிச்சயமாக! அவள் உன்னுடைய வாழ்க்கையை அன்போடு கவனித்துக் கொண்டிருப்பாள்.'' பின்னர் மாயா பழையபடி எரிமலைகளைப் பற்றி பேசத் தொடங்கினாள்.

மாயாவின் தாய் மற்றும் குடும்பத்தைப்பற்றி எங்களுக்கு சிறிதளவுதான் தெரியும். இந்தியாவில் இது சாதாரண விஷயமல்ல. அநேகமாக அவள் இந்தியாவின் மத்திய பாகத்தில்தான் இருந்திருக்க வேண்டும். மாயா தமிழர்களைப்போல் கறுப்பாக இருந்தாலும் உயரமாக அழகாக இருந்தாள். சில நேரங்களில் அவள் எந்தப் பகுதியே சேர்ந்தவள் என்று சிலர் விசாரிக்கும்போது, அவளும் அதே கேள்வியை என்னிடம் கேட்பாள். ""உண்மையில் எங்களுக்குத் தெரியாது. எங்கிருந்து வந்தவள் என்பதை நீயே தீர்மானித்துக்கொள்'' என்றேன்.

திரும்பவும் நாங்கள் வீடு திரும்பியபோது, மாயா அவளது நண்பர்களிடம் இந்தியாவில் பார்த்ததைப் பற்றிச் சொல்லவோ, அவளது பழைய புத்தகங்களையும் பொம்மைகளையும் தன்னார்வ தொண்டு அமைப்புக்கு அனுப்பவோ விரும்பினாள். சிறிதளவாவது உதவி செய்யவேண்டுமென்ற அவளது எண்ணத்தை அறிந்தபோது வளர்ந்தவுடன் இனி அவள் இந்தியாவுக்கே திரும்பிவிடுவாளோ என்ற அச்சம் தோன்றியது. திடமான எண்ணத்துடன் தான் பிறந்த நாட்டிற்குச் சென்று ஏதாவது செய்ய வேண்டுமென்று அவள் விரும்பினால் என்னுடைய கடமையில் பெரும்பகுதி நிறைவேறிவிடுமென்றே கருதினேன்.

இறுதியில் நாடு திரும்பியபோது ""இந்தியாவில் உன்னை கவர்ந்த விஷயங்கள் என்னென்ன?'' என்று கேட்டேன். இந்தியாவை மிகவும் நேசித்ததாகவும் அதன் அழகு தன்னைக் கவர்ந்ததாகவும் சொன்னாள். எப்போது பார்த்தாலும் கார்களிலேயே அமர்ந்திருந்தது, வங்கிகளில் காத்திருந்தது, டிராவலர்ஸ் செக்குகளை மாற்றக் காத்திருந்தது போன்றவை எல்லாம் தன்னை அலுப்படைய வைத்ததாகச் சொன்னாள். நான் அவளை தத்தெடுத்ததற்கான காரணத்தை மாயா உணர்ந்திருப்பாளென்றே கருதுகிறேன். அவளைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரண நிகழ்வுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.