வேலைக்காரி: இதோ பாரும்மா... இனிமே பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு வம்பெல்லாம் என்னைக் கேட்காதீங்க
வீட்டுக்காரம்மாள்: ஏன் முனியம்மா?
வேலைக்காரி:இண்டர்நெட் சைட் http:www.muniamma.com பாருங்க.
""அந்த ஆட்டோ டிரைவர் குடிகாரனா? எப்படிச் சொல்ற?''
""குவாட்டருக்கு மேல போட்டுக் கொடுன்னு சொல்றாரே?''
""பணம் எடுக்க வந்தவர் ஏன் கீழே விழுந்துட்டார்?''
""பேலன்ஸ் இல்லையாம்''
""டான்ஸ் மாஸ்டரைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சு''
""ஆட்டி வைக்கிறார்டி''
""ஏலம் விடுறவரு மூணு பெண்டாட்டிக்காரரா? எப்படிச் சொல்ற?''
""அவர் ஏலம் விடும்போது ஒரு தாரம், ரெண்டு தாரம், மூணு தாரம்னு சொல்றாரே''
""இவ்வளவு ஸ்வீட்டா பேசுறாரே, யாருடி அவர்?''
""அவர்தான் என் "சீனி'யர் மேனேஜர்''
""நம்ம டாக்டரை ஒரு பேஷண்ட் திட்டிட்டாரு''
""பதிலுக்கு டாக்டர் ஏதும் சொல்லலியா?''
""இன்சல்ட்டிங் ஃபீஸ்னு இருநூறு ரூபாய் வசூல் பண்ணிட்டாரு''
மனைவி: உங்கம்மாவுக்குப் பேய் பிடிச்சிருக்கு
கணவன்: அப்படியா? எங்கம்மாவுக்கு உன்னைப் பிடிக்காதுன்னுல இத்தனை நாளா நெனைச்சிக்கிட்டு இருந்தேன்.
""சிலந்தி ஏன் ஸ்வீட் கொடுக்குது?''
""அது புதுசா ஒரு "வலை'தளம் ஆரம்பிக்குதாம்''
""சிறுவனை ஏன் வேலையை விட்டு முதலாளி தூக்கிட்டார்''
""கஸ்டமர் டிபன் ரெடியான்னு கேட்டதுக்கு நேத்தைக்கே ரெடி சார்னு சொன்னானாம்''
ஆசிரியர்: உன் பெயர் என்னம்மா?
மாணவி: சுந்தரி
ஆசிரியர்: வீட்டில் எப்படி கூப்பிடுவார்கள்?
மாணவி: கிட்ட இருந்தா மெதுவாக, தூரத்தில் இருந்தா கத்திக் கூப்பிடுவாங்க சார்!!!
""என்னடா மார்க் வாங்கியிருக்க, கேவலமா? என்ன அப்பான்னு கூப்பிடாதே''
""சரி! ரொம்ப அலட்டிக்காத மச்சி, ரேங்க் கார்டில் கையெழுத்தப்போடு!!!''
""நீ பெயில் ஆனதுக்கு எதுடா முக்கியக் காரணம்?''
""வேறென்ன எக்ஸாம்தான்''
""வெளியில் இருந்து யார் வந்தாலும் டா, டி ன்னு மரியாதை குறைவாக பேசக்கூடாது என்ன?''
""சரி! டாடி!!!''
முதல் பெரியவர்: அடிக்கடி முதியோர் இல்லத்துல இருக்கிற மாதிரி கனவு வர்றது
இரண்டாவது பெரியவர்: அப்ப, கூடிய சீக்கிரம் உன் பிள்ளைக்குக் கல்யாணம்னு சொல்லு!
""ஏன்டா தம்பி கதவை சாத்திக்கொண்டு மருந்து குடிக்கிறே?''
""டாக்டர்தான் அறை மூடி மருந்து குடிக்கச் சொன்னார்!''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


