தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெட் ஜோக்ஸ்

கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்பரா ஏற்கெனவே ரூ.50 லட்சம் வென்றிருந்தாள். நிகழ்ச்சியாளர் மேற்கொண்டு கேள்விகளைக் கேட்டார். ""எந்தப் பறவை தனக்காக கூடு கட்டுவதில்லை? ஏ.ராபின், பி.குருவி, சி. கு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:08 pm

அ. குமார்

கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்பரா ஏற்கெனவே ரூ.50 லட்சம் வென்றிருந்தாள். நிகழ்ச்சியாளர் மேற்கொண்டு கேள்விகளைக் கேட்டார். ""எந்தப் பறவை தனக்காக கூடு கட்டுவதில்லை? ஏ.ராபின், பி.குருவி, சி. குயில், டி.தூக்கணாங்குருவி. இந்தக் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைக்கும்'' என்றார்.

 பார்பரா சொன்னாள்: ""எனக்கு விடை தெரியும். ஆனால் க்ளு ஏதும் இல்லாததால் என்னுடைய தோழி மேகிக்கு போன் செய்து தகவல் பெறலாமல்லவா?'' நிகழ்ச்சியாளர் சொன்னார் ""தாராளமாக!''

 நிகழ்ச்சியாளர் போனை எடுத்து எண்களை சுழற்றி, ""ஹலோ மேகி, உங்களுடைய தோழி பார்பரா இங்கு கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவருக்கு உங்களுடைய உதவி தேவை. நீங்கள் உதவி செய்தால் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைக்கும்'' என்று கூறி போனை பார்பராவிடம் கொடுத்தார்.

 ""இது ஒரு சாதாரண விஷயம். குயில்'' என்று மேகி பதில் அளித்தாள்.

 சரியான விடையை கூறியதால் பார்பராவுக்கு ஒரு கோடி பரிசு கிடைத்தது. அடுத்த நாள் தனது தோழிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உள்ளூர் ஓட்டல் ஒன்றுக்கு விருந்துக்கு அழைத்துச் சென்றாள்.

 அப்போது பார்பரா கேட்டாள், ""குயில் தனக்கென்று கூடு கட்டாது என்பது உனக்கெப்படி தெரிந்தது?'' மேகி சொன்னாள், ""இதோ பார் பார்பரா! இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே! எல்லோர் வீட்டிலும் குயில் கடிகாரத்திற்குள்தானே குடியிருக்கிறது!''

 கிறிஸ்தவ ஆலயத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மத போதகர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் ""அடுத்த வாரம் பொய் சொல்லுதலைப் பற்றி பிரசங்கம் செய்யப் போகிறேன். நான் எடுத்துக் கொண்ட தலைப்பைக் குறித்து நீங்கள் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள மாற்கு என்ற அத்தியாயத்தின் 17-வது அதிகாரத்தை முழுவதுமாக வாசித்து வாருங்கள்'' என்றார்.

 ஆலயத்துக்கு வந்திருந்த அனைவரும் வாசித்து வருவதாக உறுதியளித்து சென்றனர். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மத போதகர் ""யாரெல்லாம் மாற்கு அத்தியாயத்தின் 17-வது அதிகாரத்தை வாசித்து வந்தீர்கள்'' என்றார். சிறிதும் தாமதிக்காமல் அனைவரின் கையும் உயர்ந்தது.

 உடனே போதகர் ""பொய் கூறுவது குறித்த என் விரிவான போதனையை ஆரம்பிக்கிறேன். ஏனென்றால் மாற்கு அத்தியாயத்தில் மொத்தம் 16 அதிகாரங்கள்தான் உள்ளன'' என்றார்.

 மனோதத்துவ நிபுணரிடம் சென்றான் டேனியல். ""தினமும் இரவு கட்டிலில் படுத்தால் என் கட்டிலுக்கு கீழ் யாரோ இருப்பது போன்று தோன்றுகிறது. கட்டிலுக்கு கீழே சென்று படுத்தால் கட்டிலுக்கு மேல் யாரோ இருப்பது போன்று தோன்றுகிறது. தினமும் மேலும், கீழுமாய் அவஸ்தைப்படுகிறேன்'' என்றான். அதனைக் கேட்ட மனோதத்துவ நிபுணர் ""வாரத்துக்கு மூன்று நாள் வீதம் ஓர் ஆண்டுக்கு என்னிடம் சிகிச்சைக்கு வந்தால், குணப்படுத்திவிடலாம்'' என்றார்.

 ""ஒவ்வொரு முறை உங்களை சந்திப்பதற்கும் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்'' என்று கேட்டான் டேனியல். ""ஒவ்வொரு முறையும் 100 டாலர்கள்'' என்றார் நிபுணர்.

 6 மாதங்களுக்குப் பின் டேனியலை தெருவில் சந்தித்த நிபுணர்,"" ஏன் என்னிடம் ஒரு முறை கூட சிகிச்சைக்கு வரவில்லை?'' என்று கேட்டார். ""என் நண்பர் ஒருவரிடம் இந்தப் பிரச்னையை சொன்னேன். வெறும் 5 டாலர் செலவில் எனக்கு குணமாகிவிட்டது'' என்றான் டேனியல்.

 ""எப்படி?'' ஆச்சர்யமாகக் கேட்டார் நிபுணர்.

 ""கட்டிலின் 4 கால்களையும்

 நீக்க சொல்லிவிட்டான் நண்பன்'' என்றான் டேனியல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.