* ஆந்திர மாநிலத்தில் பொங்கலன்று பொம்மைகளைக் கொலுவில் வைத்து மகிழ்கிறார்கள். இந்தக் கொலுவில் உழவர், ஏர் முதலிய பொம்மைகள் பிரதானமாக இடம் பெறுகின்றன. அன்று ரேக்ளா வண்டி பந்தயம், கோழிச்சண்டை முதலியன நடைபெறும்.
* ராஜஸ்தானில் மகர சங்கராந்தி அன்று ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் பட்டம் விடும் போட்டி நடைபெறும். அப்போது போலோ விளையாட்டும் நடைபெறும். ஆனால் வித்தியாசமாக சைக்கிள் போலோ நடைபெறும்.
* மகாராஷ்டிர பகுதிகளில் பொங்கல் பண்டிகை இந்திரனுக்கு மரியாதை செய்யும் பண்டிகையாகப் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையின்போது இந்திரனை கெüரவிக்கும் பொருட்டு இந்திரனின் வாகனமான யானை சித்திரத்தை எல்லா இடங்களிலும் வரைந்து கொண்டாடுகின்றனர்.
கரும்பின் மகத்துவம்
* வெள்ளைக் கரும்பு கனமும் சுவையும் நிறைந்ததாகும். எளிதில் செரிக்காது. கபத்தையும் சிறுநீரையும் அதிகமாக்கும்.
* கறுப்புக் கரும்பு கரிப்பும் இனிப்பும் கொண்டது. இதற்கு நிறையச் சாறு உண்டு. மூன்று தோஷங்களையும் போக்கும் வலிமை தரக்கூடியது.
* நாமக் கரும்பு நிறைந்த சாறும் மென்மையும் கொண்டதாகும்.
* கரும்பின் வேருக்கு மேல் பகுதி இனிப்புடையது. நடுவில் மிகுந்த இனிப்பு இருக்கும். முனைப்பகுதி கரிப்பும் சுவையற்ற தன்மையும் உடையதாகும்.
* கரும்பை வெறும் வயிற்றில் உட்கொண்டால் பித்தத்தைப் போக்கும். இதன் சாறு அமிர்தத்திற்கு ஒப்பானது.
* கரும்புச்சாறு மஞ்சள் காமாலை நோய் கண்டவர்களுக்கு கொடுக்கலாம். அதன் சீற்றத்தைக் குறைக்கும்.
இஞ்சியின் பயன்கள்
* சீதளத்தை, கபத்தை, ஜலதோஷத்தை வயிற்றுக் கோளாறுகளை பித்தத்தைக் குணமாக்குவதில் இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தே இல்லை.
* வாரத்தில் ஒரு முறை இஞ்சியையும் பூண்டையும் வெந்நீர் தெளித்து இடித்துச் சாறு எடுத்து வடிகட்டுங்கள். வளரும் குழந்தைகளுக்கு இரண்டு அவுன்ஸ் சாறைப் புகட்டிவிடுங்கள். வயிறு சுத்தமாகும். குடல் சுத்தமாகும். எந்த நோயும் அணுகாது. வளர்ச்சி வேகமாகும். "ஊட்டி வளர்க்கும் இஞ்சி, நோய் வந்தால் உடனே காட்டிக் கொடுக்கும்' என்பார்கள்.
* சளிக்கும் தலைப்பாரத்திற்கும் இஞ்சி சாற்றை சுடவைத்து நெற்றியில் பற்றுப் போடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


