வாடகையை உயர்த்திக் கொண்டே போவது முறையா?
எஸ்.கோபிநாதன் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம், அன்றைய மெட்ராஸில் குண்டு விழுந்தது. அன்றைக்கு குடித்தனம் இருந்தவர்கள் எல்லோரும் மெட்ராûஸ விட்டு வெவ்வேறு இடங்களுக்குச் செ


எஸ்.கோபிநாதன்
சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்
இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம், அன்றைய மெட்ராஸில் குண்டு விழுந்தது. அன்றைக்கு குடித்தனம் இருந்தவர்கள் எல்லோரும் மெட்ராûஸ விட்டு வெவ்வேறு இடங்களுக்குச் சென்றனர். போர்முடிந்தபின் மீண்டும் மெட்ராஸýக்கு வந்து குடியமர ஆரம்பித்தனர். அப்போது வீட்டு உரிமையாளர்கள் குடித்தனம் இருப்போரை திடீர் திடீரென்று அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இதைக் கட்டுப்படுத்துவதற்கு உண்டானதுதான் "நகர் குடியிருப்போரைக் காக்கும் சட்டம்'.
ஒரு வீட்டிற்கான வாடகையை நிர்ணயிப்பதற்கு சில விஷயங்களை சட்டம் வரைமுறைப்படுத்தியுள்ளது. அரசாங்கம் வரையறுத்திருக்கும் நிலத்தின் மதிப்பு, கட்டடத்தின் வயது, கட்டடத்தின் தரைப்பகுதி மொசைக், டைல்ஸ், கிரானைட் எதைப் பயன்படுத்தி போடப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். கதவு, ஜன்னல்கள் எல்லாம் தேக்கு மரத்தில் செய்யப்பட்டிருக்கிறதா, சாதாரண காட்டு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். தண்ணீர் வசதிகள் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
பள்ளி, கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை, ரயில் நிலையம், பேருந்து நிலையம், அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருள்களை வாங்குவதற்கான கடைகள் எல்லாமும் ஒரு வீட்டிற்கு அருகில் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். இவை ஒவ்வொன்றின் அடிப்படையில்தான் ஒரு வீட்டிற்கு வாடகைக் கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்.
தான் இருக்கும் வீட்டிற்கு கொடுக்கப்படும் வாடகை மிக அதிகமாக இருக்கிறது என்று குடித்தனம் இருப்பவர் நினைத்தால் அவர், நீதிமன்றத்தை நாடி நியாயமான வாடகையை நிர்ணயித்துக் கொள்ளலாம். "மிகக் குறைந்த வாடகையில்தான் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இருந்து கொண்டிருப்பேன்' என்று சண்டித்தனம் செய்யும் குடித்தனக்காரரை எதிர்த்து வீட்டின் உரிமையாளரும் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்.
சட்டத்தின் வழிமுறையோடு வீட்டிற்கான சரியான வாடகையைத் தெரிந்து கொள்வதற்கு வழியிருக்கிறது.
வாடகைக்கு விடுபவர்களுக்கு முறையான ரசீதை வீட்டு உரிமையாளர் வழங்கவேண்டும். வாடகைக்கு இருப்பதற்கான ஒப்பந்தம் காலாவதியானால் அதை உரிய காலத்தில் நீட்டித்துக் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...