தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெட் ஜோக்ஸ்

தன்னுடைய கணவன் ஹாலில் கொசு தடுப்பாணை வைத்து ஈக்களை துரத்திக் கொண்டிருப்பதைப் பார்த்த மனைவி, ""என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டாள். ""ஈக்களை வேட்டையாடுகிறேன்'' என்றான் கணவன். ""ஓ! எதையாவது கொன்றீர்களா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:49 am

அ. குமார்

தன்னுடைய கணவன் ஹாலில் கொசு தடுப்பாணை வைத்து ஈக்களை துரத்திக் கொண்டிருப்பதைப்

பார்த்த மனைவி, ""என்ன செய்கிறீர்கள்?'' என்று கேட்டாள்.

""ஈக்களை வேட்டையாடுகிறேன்'' என்றான் கணவன்.

""ஓ! எதையாவது கொன்றீர்களா?''

""ஆமாம்! மூன்று ஆண், இரண்டு பெண் ஈக்கள்'' என்றான் கணவன்.

""அவற்றை ஆண், பெண் என்று  எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?''

""மூன்று ஈக்கள் பீர் பாட்டில் மீதும், இரண்டு ஈக்கள்

டெலிபோன் மீதும் அமர்ந்திருந்தன'' என்றான் கணவன்.

-------------------------------------------------------------

பாதை வழியே சென்ற இளைஞனொருவனை பார்த்த தவளையொன்று அவனை அழைத்து தன்னை முத்தமிட்டால் அழகான இளவரசியாக மாறுவேன் என்று

சொன்னது. உடனே அவன் கீழே குனிந்து தவளையை கையில் எடுத்து தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக்கொண்டான். தவளை மீண்டும் பேசியது,

""நீ என்னை முத்தமிட்டால் ஒரு வார காலம்தான்

உன் அன்பிற்குரியவளாக உன்னுடன் இருப்பேன்'' அவன் அதற்கும் பதிலளிக்கவில்லை.

பின்னர் அந்த தவளை கண்ணீர் விட்டபடியே சொன்னது,

""நீ என்னை முத்தமிட்டால் நான் அழகான

இளவரசியாக மாறுவேன். உனக்காக ஒரு வருடம்

என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்''

மீண்டும் அந்தத் தவளையை பாக்கெட்டிலிருந்து

எடுத்துப் பார்த்து சிரித்தபடியே பழையபடி பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.

கடைசியாக அந்தத் தவளை கேட்டது,

""என்ன ஆயிற்று?

நான் ஒரு அழகான இளவரசி என்று உன்னிடம் கூறியும் நீ ஏன் என்னை முத்தமிட மறுக்கிறாய்?''

அந்த இளைஞன் சொன்னான், ""இதோ பார்! நான்

ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர்.

காதலியை வைத்துக்கொள்ள எனக்கு நேரமில்லை. ஆனால் பேசும் தவளை ஒரு ஆச்சரியம் அல்லவா?''

-------------------------------------------------------------



வயதான பாதிரியார் ஒருவர் இறந்துவிட்டார்.

மேலுலகத்திற்கு சென்றபோது செயின்ட் பீட்டர் வாசலருகில் இவருக்கு முன்னதாக

வேறொருவர் சொர்க்கத்துக்கு செல்லக் காத்திருந்தார்.

செயின்ட் பீட்டர் அவரைப் பார்த்து உங்களுடைய பெயர்,

செய்து வந்த தொழில் என்ன? என்று கேட்டார்.

""என் பெயர் ஜோ கோஹன். கடந்த 14 ஆண்டுகளாக

நியூயார்க்கில் டாக்ஸி டிரைவராக இருந்தேன்''

என்றார். ""நல்லது. இந்தாருங்கள்.

இந்த பட்டு சால்வையையும் தங்க செங்கோலையும்

எடுத்துக்கொண்டு இந்த வழியில் செல்லுங்கள். நமது தேவனிடம் சென்றடையலாம்'' என்றார் பீட்டர். அடுத்து பஜ்ôதிரியாரிடம் அதே கேள்வியை கேட்டபோது, ""என் பெயர் ஃபாதர் ஓஃபிளானகன். கடந்த 62 ஆண்டுகளாக கடவுளுக்கு சேவை செய்து வந்தேன்'' என்றார்.

""நல்லது. இந்த பருத்தி சால்வையையும் மரச் செங்கோலையும் எடுத்துக்கொண்டு இந்த வழியில் செல்லுங்கள். நம்முடைய தேவனிடம் சென்றடையலாம்'' என்றார் பீட்டர்.

""ஒரு நிமிடம். அந்த டாக்ஸி டிரைவருக்கு பட்டுத்துணியும் தங்க செங்கோலையும்

கொடுத்தனுப்பினீர்கள். எனக்கு மட்டும் பருத்தித் துணியையும் மரச் செங்கோலையும்

கொடுத்தனுப்புகிறீர்களே ஏன்?'' என்று கேட்டார் பாதிரியார்.

""இதோ பாருங்கள். நீங்கள் பிரசங்கம் செய்யும்போது

அனைவரும் தூங்கிவிடுகிறார்கள். ஆனால் இவர் வண்டி ஓட்டும்போது ஒவ்வொருத்தரும் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டுமே என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறார்கள்'' என்றார் பீட்டர்.

-------------------------------------------------------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.