இளம்பிள்ளை வாதம் நோய் வராமல் தடுக்க ஆயுர்வேதத்தில் குறிப்புகள் உள்ளனவா?
எஸ்.அனந்தராமன், புட்டபர்த்தி.
பிறந்தவுடன் குழந்தை மூச்சுவிடத் தொடங்குகிறது. பலா தைலம் எனும் மூலிகைத் தைலத்தை உடனே குழந்தையின் உச்சந் தலையில் தடவி விடுவதை நம் முன்னோர் கையாண்டனர். இதனால் பிறக்கும் குழந்தைக்கு நிச்சயமாய் ஏற்படும் உடல் வலி, களைப்பு போன்றவை உச்சந் தலையில் எண்ணெய் தடவுவதால் நீங்கும். உடலில் வாதத்தின் கெடுதிகளைப் போக்குவதற்கு இந்தத் தைலம் மிகச் சிறந்தது. உச்சிக்கு எண்ணெய் இடுவதில் அதிக முக்கியத்துவம் ஆயுர்வேதம் காட்டுகின்றது. தைலத்தை வெறுமனே தடவினால் மட்டும் போதாது.
தலை முழுக்கவும் பலா தைலத்தைத் தடவிவிட்டு ஒரு மெல்லிய துணிக்குட்டையை பலா தைலத்தில் தோய்த்து குழந்தையின் தலையில் படிய வைக்க வேண்டும். இதற்குத் தைலபிசு என்று பெயர். இதற்குப் பிறகுதான் தொப்புள்கொடி நறுக்குதல், ஜாதகர்மபிரோயகம் போன்றவை செய்யப்படும்.
ஜாதகர்ம - குழந்தைக்கு எல்லாவித சுகங்களுடன் கூடிய தீர்க்கமான ஆயுளையும் சம்பத்தையும் வளர்க்கக் கூடியது. பிரசவ அறையிலேயே தந்தை குழந்தைக்குச் செய்வது. தொப்புள் கொடி நறுக்குவதற்கு முன்பே,ஜாத கர்ம செய்வது முன்பெல்லாம் வழக்கத்திலிருந்தது. தந்தை அருகில் இல்லாதிருந்தால், பிறந்த 11 வது 12 வது தினத்தில் ஜாதகர்மத்தைச் செய்வார்கள்.
கொடி நறுக்குதல், குளிப்பாட்டல், தாய்ப்பால் கொடுத்தல், மற்ற உணவு கொடுத்தல் இவற்றையே மந்திரங்கள் மூலம் தேவதாப் பிரார்த்தனையுடன் சேர்த்துச் செய்வதுதான் ஜாதகர்ம கார்யத்தின் சிறப்புகள்.
ஆனால் இந்நாளில் அவை மறைந்து போன நிலையில் குழந்தைகளுக்குப் பல உபாதைகள் ஏற்படுகின்றன.
தொப்புள் கொடி நாளத்தில் ரத்த ஓட்டம் துடிப்பு முற்றிலும் அடங்கிய பிறகே நாளம் நறுக்கப்பட வேண்டும். கத்தரிப்பு முடிந்தபின்பு தொப்புளில் கோஷ்ட தைலம் எனும் மூலிகை மருந்தை, குழந்தைக்கு நன்றாகத் தடவி, ஒரு மெல்லிய துணியை இந்த தைலத்தில் நனைத்துக் கட்டிவிடுவதும் வழக்கத்திலிருந்தது.
இதனால் குழந்தைக்கு புண் வராமல் காப்பதுடன், குடல் வாயு தொந்தரவு வராமல் தடுக்கவும் முடியும். நறுக்கி ஒதுக்கப்பட்ட தொப்புள் கொடியிலிருந்து ஓர் அங்குலம் தனியாகக் கத்தரித்து, நூலில் கட்டி குழந்தையின் கழுத்தில் சில மணி நேரம் கட்டி வைப்பது ஒரு ரûக்ஷயாகும்.
குழந்தை உடலில் ஓட்டிக் கொண்டிருக்கும் பிசுபிசுப்பைப் போக்குவதற்கு லாக்ஷôதி குழம்பு அல்லது லாக்ஷôதி தைலம் தடவுதல் மிகச் சிறந்தது. வெந்நீர் காய்ச்சும்போது ஒரு கொத்து விளா இலையைப் போட்டு அதைக் கொண்டு குழந்தையைக் குளிப்பாட்டினால் இளம்பிள்ளை வாத உபாதையைத் தடுக்க வாய்ப்பிருக்கிறது. ஏலம், லவங்கம், லவங்கப்பட்டை, லவங்கப்பத்திரி, அகில் கட்டை இவை கொஞ்சம் சேர்த்துப் பொடித்துப் போட்டுத் தண்ணீர் காய்ச்சி குளிப்பாட்டுவதும் நல்லதே.
முழு பச்சைப் பயறு ஒரு பங்கு, உலர்ந்த எலுமிச்சம்பழத்தின் தோல் அரைப்பங்கு, வெந்தயம் கால் பங்கு அரைத்துச் சலித்து, சாதம் வடித்த கஞ்சியில் கலக்கி, எண்ணெய் பிசுக்கு, அழுக்குப் போக்கலாம். அதற்கு இது சிறந்த பொடியாகும். சந்தனக்கட்டையை அரைத்த சந்தனத்தூள் ஒரு பங்கு, நல்ல மைதா மாவு ஒரு பங்கு இரண்டையும் சேர்த்துத் துணியில் சலித்து, சிட்டிகை அசல் பச்சைக் கற்பூரம், இரண்டு சிட்டிகை அசல் குங்குமப்பூவும் நன்றாய்ப் பொடித்துக் கலந்து, குழந்தையைக் குளிப்பாட்டிய பிறகு, உடலில் பவுடர் போலத் தூவுவதால் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வளரும். சொறி சிரங்கு கரப்பான் வராது.
வசம்பை சிறுதுண்டங்களாக நறுக்கி, பசும்பாலில் 6 மணி நேரம் ஊற வைத்து, வெந்நீரில் கழுவி, வெய்யிலில் உலர்த்தி, நன்றாகப் பொடித்து துணியில் சலித்துக் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்துவார்கள். கொஞ்சம் சொரசொரப்பான சிறு தங்கப் பாலாடையில் நெய், தேன், தாய்ப்பால் சில துளிகள் சேர்த்து, வசம்பு சூர்ணம் சிறுபயறு அளவு சேர்த்துக் குழவியினால் 3 நிமிடங்கள் நன்றாகத் தேய்த்து அதைக் குழந்தைக்கு ஊட்டுவார்கள்.
இவ்விதம் தொடர்ந்து 1 வருடகாலம் தினசரி செய்வார்கள்.
வசம்பு சூர்ணத்தின் அளவை மாதம் 3 கடுகு அளவு வீதம் கூட்டலாம். இதனால் குழந்தைக்குப் பின்னாளில் படிப்பை எளிதில் அறியும் ஆற்றல், அறிந்த கல்வியை மறக்காமல் இருக்கும் சாமர்த்தியம், இளம்பிள்ளை வாதத்தை உண்டாக்கும் வைரஸிலிருந்து பாதுகாப்பு போன்றவை கிடைக்கும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


