ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

டிப்ஸம்மா... டிப்ஸ்!

சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும்போது மஞ்சள் வாழைப்பழத்தைச் சேர்த்துப் பிசையவும். சுவையாகவும் இருக்கும்.

News image
Updated On :28 டிசம்பர் 2013, 7:05 am

கீதா ஹரிஹரன்

சப்பாத்தி மிருதுவாக இருக்க மாவு பிசையும்போது மஞ்சள் வாழைப்பழத்தைச் சேர்த்துப் பிசையவும். சுவையாகவும் இருக்கும்.

 கறிவேப்பிலை, கொத்துமல்லி மலிவாகக் கிடைக்கும் சமயங்களில் வெயிலில் காயவைத்து ரசப்பொடியுடன் கலந்து வைத்துக்கொண்டால் கறிவேப்பிலை, கொத்துமல்லி இல்லாத சமயத்திலும் ரசம் கமகமக்கும்.

 அரிசி, பருப்பு, நூடுல்ஸ், ரசம் போன்றவை அடுப்பிலிருக்கும்போது பொங்கி வழிகிறதா? அவை இருக்கும் பாத்திரங்களின் மேல் விளிம்பில் சற்று உள்புறமாக எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி தீயைக் குறைத்து வைத்துச் சமைத்தால் பொங்காமல் இருக்கும். மைக்ரோவேவ் அடுப்பு மூலமாகச் சமைக்கும்போதும் இதுபோன்ற எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி சமைக்கலாம்.

 சாப்பிட முடியாத அளவுக்கு வாழைப்பழங்கள் கொழகொழவென்று கனிந்திருக்கிறதா? தோலை உரித்து பழத்தை கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து இனிப்பு சப்பாத்திகளோ, இனிப்பு பூரிகளோ தயாரித்து விடலாம். அல்லது பாலுடன் மிக்ஸியில் அடித்து "மில்க்ஷேக்' தயாரிக்கலாம்.

 பிரெட் துண்டுகளுக்கு இடையில் காய்கறிக் கலவையை வைத்து சாண்ட்விச் தயாரிக்கும்போது கத்தியால் ஷார்ப்பாக துண்டு போட வராது. சிலசமயம் காய்கறிகளில் இருந்து பிரெட் வழுக்கிக் கொள்ளும். இதைத் தவிர்க்க பிரெட்டை நான்கு அல்லது இரண்டு துண்டுகளாக கட் செய்வதற்கு முன் கத்தியை வெந்நீரில் முக்கி எடுத்து கட் செய்தால் எளிதாகத் துண்டு போட வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.