தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

"சாயங்கால ராகங்கள்'

1937-ம் ஆண்டில் பிறந்த பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் டெரிமூர், 20-வது வயதிலேயே புகைப்படத் துறையில் ஈடுபாடு கொண்டு வித்தியாசமாகப் புகைப்படங்களை எடுப்பதில் புகழ்

News image
Updated On :23 பிப்ரவரி 2013, 9:10 am

அ. குமார்

1937-ம் ஆண்டில் பிறந்த பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் டெரிமூர், 20-வது வயதிலேயே புகைப்படத் துறையில் ஈடுபாடு கொண்டு வித்தியாசமாகப் புகைப்படங்களை எடுப்பதில் புகழ் பெற்றவராக விளங்கினார். தன்னுடைய புகைப்படத் தொகுப்புகளை 12 புத்தகங்களாக வெளியிட்டுள்ள இவர், பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் புகைப்படக் கண்காட்சியை நடத்தியுள்ளார். முதன்முறையாக 1976-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தபோது பிரபலமான இடங்களை மட்டுமன்றி, பிரபலமானவர்களையும் தேடிப் பிடித்து இயற்கையாகப் படமெடுத்துள்ளார்.

"சாயங்கால ராகங்கள்' என்ற தலைப்பில் அந்தப் புகைப்படங்களை நூலாக வெளியிட்டதோடு, சிறந்த 60 புகைப்படங்களை தேர்வு செய்து அதே தலைப்பில் கண்காட்சியாகவும் பெங்களூரில் அண்மையில் நடத்தினார்.

படத்தில் இடம் பெற்றவர்களைப் பற்றிய குறிப்புகளும் சுவையாக இருந்தன.

1976-ஆம் ஆண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி- சதாசிவம் தம்பதியரை அவர்களது வீட்டிலேயே டெமிமூர் எடுத்த புகைப்படமும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. எம்.எஸ். பற்றிய குறிப்பில், "திறமையும் சாதனைகளையும் படைத்த இவர் பத்மபூஷண் (1954), ராமோன் மாகசேசே விருது (1974), பத்மவீபூஷண் (1975), காளிதாஸ் சன்மான் (1988), இந்திராகாந்தி விருது (1990), பாரத ரத்னா (1998) போன்ற பல்வேறு விருதுகளை பெற்ற ஒரே இந்திய இசைக் கலைஞரான இவர், வாழ்க்கையிலே ஒரு சாதனை தென்னிந்திய மாமியாகவே வாழ்ந்தார். மேடையில் இவர் பாடிய பாடல்கள், கீர்த்தனைகள் ரசிகர்களை தெய்வீக உலகிற்கே அழைத்துச் சென்றன.

கணவர் சதாசிவம் கட்டுபாட்டிலேயே அவரது வாழ்க்கை இருந்தது. அவரது அனுமதியில்லாமல் எந்தவொரு இசை நிகழ்ச்சியையைம் அவர் ஒப்புக் கொண்டதில்லை. அவர் தேர்வு செய்து தரும் பாடல்களை மட்டுமே மேடையில் பாடுவார். அவரது இசை நிகழ்ச்சியில் மேடை எதிரில் முதல் ஆளாக அமர்ந்திருக்கும் சதாசிவத்தின் ஒப்புதல் பெற்ற பிறகே ரசிகர்களின் வேண்டுகோளின்படி பாடல்களை பாடுவார்' என்றும் டெமிமூர் குறிப்பிட்டுள்ளார்.

படஉரிமைக்கு ஒரு டாலர்!
நான்காண்டுகளுக்கு முன்பு தீபா மேத்தா, பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியை சந்தித்தபோது, அவரது "மிட்நைட் சில்ரன்' நாவலைப் படமாக்க விரும்பினார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது உடனடியாக ஒப்புதல் அளித்த ருஷ்டி, இந்த நாவலைப் படமாக்குவதற்காக உரிமை அளித்த வகையில் ஒரே ஒரு டாலர் மட்டுமே தொகையாகப் பெற்றுக் கொண்டாராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.