ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இனிப்போ... இனிப்பு!

முறுக்கு மாவு பிசையும்போது, அத்துடன் ஒரு மேஜைக் கரண்டி நெய் ஊற்றி மாவை நன்கு பிசைந்து முறுக்கு சுட்டு எடுத்தால், நெய் மணத்துடன் கூடுதலான சுவையுடன் முறுக்கு இருக்கும்.

News image
Updated On :9 நவம்பர் 2013, 7:06 am

கீதா ஹரிஹரன்

*  முறுக்கு மாவு பிசையும்போது, அத்துடன் ஒரு மேஜைக் கரண்டி நெய் ஊற்றி மாவை நன்கு பிசைந்து முறுக்கு சுட்டு எடுத்தால், நெய் மணத்துடன் கூடுதலான சுவையுடன் முறுக்கு இருக்கும்.

*  இரண்டு பங்கு பாசிப் பயறு, ஒரு பங்கு கடலைப் பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவில் மைசூர் பாகு செய்தால் மைசூர் பாகு மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

*  சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப் பால் விட்டுச் செய்தால், மிகவும் சுவையாக இருக்கும்.

*  சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர்  நமத்துப் போகாமலிருக்கும்.

*  போளி செய்யும்போது மேல் மாவுக்கு மைதா மாவு பிசையும் போது சிறிது பால் பவுடரும் சேர்த்துப் பிசைந்தால், போளி மிருதுவாக இருக்கும்.

*  லட்டுப் பிடிக்கும்போது ஏதாவது பழ எசென்ûஸ சிறிது விட்டு லட்டு பிடித்தால், லட்டு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

*  தேன் குழல், நாடா முறுக்கு, தட்டை போன்றவை நமத்துப் போகாமல் மொறுமொறுவென இருப்பதற்கு மாவைப் பிசையும்போது வெந்நீர் ஊற்றிப் பிசைய வேண்டும்.

*  போளிக்கு கடலைப் பருப்பு பூரணம் செய்யும்போது, வெல்லத்துக்குப் பதில் பொடித்த சர்க்கரையைப் பயன்படுத்தினால் போளி, மெல்லியதாக, வெண்மையாக, சுவையாக இருக்கும்.

*  கேழ்வரகை  ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போலச் செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாக இருக்கும்.

*  கேசரி, பொங்கல், அல்வா ஆகியவற்றைக் கெட்டியான பிறகு இறக்கக் கூடாது. கொஞ்சம் முன்னதாக இறக்க வேண்டும். ஆறிய பின்பு அவை சரியான பதத்துக்கு வந்துவிடும்.

*  சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு விட்டால் பாகு முறுகாமல் இருக்கும்.

*  சிப்ஸ், காராபூந்தி ஆகியவற்றைத் தயார் செய்யும்போது காரத்துக்கு மிளகாய்த்தூள் போடுவதற்குப் பதிலாக மிளகுத்தூள் போடலாம். காரமும் குறைவாக இருக்கும். உடலுக்கும்  நல்லது.

*  பர்பி, மைசூர் பாகு போன்றவற்றைத் துண்டுகள் போடும் போது சிதறி விழும் தூள்களை ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.  சோமாஸ் செய்யும்போது இதையும் பூரணமாக வைத்துச் சில சோமாஸ்கள் சின்னதாகத் தயாரித்துவிடுங்கள். தனிச் சுவையுடன் இருக்கும்.

*  பலகாரங்கள் செய்ய எண்ணெய் வைக்கும்போது இஞ்சி, வாழைப் பட்டையை அம்மியில் நசுக்கி, மறக்காமல் போட்டு பொரித்து எடுத்த பிறகே உபயோகிக்க வேண்டும். இதனால் பலகாரம் அதிகம் எண்ணெய்யைக் குடிக்காது. எண்ணெய்யும் பொங்கி வழியாது. எண்ணெய்ப் புகையினால் வாந்தி, தலைசுற்றல் வரவும் செய்யாது.

*  மிக்சரில் கறிவேப்பிலையை அப்படியே பொரித்துப் போடுவதைவிட, கறிவேப்பிலையை நன்கு பொடியாக நறுக்கி, பின் பொரித்துக் கலந்தால் வாசனை தூக்கும்.

*   ரவா கேசரி, சேமியா கேசரி, அவல் கேசரி செய்யும்போது வெள்ளரி விதை சேர்த்தால் வித்தியாசமான சுவையோடு இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.