முதல் பாடல்!
மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் ஸ்ரீ சிதம்பர நாத சுவாமிகளுடன் காசிக்குச் சென்று பலவித கலைகள் பயின்றதோடு, ஸ்ரீவித்யா மந்திரம் ஜெபித்து


மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் ஸ்ரீ சிதம்பர நாத சுவாமிகளுடன் காசிக்குச் சென்று பலவித கலைகள் பயின்றதோடு, ஸ்ரீவித்யா மந்திரம் ஜெபித்து மந்திரசித்தியும் பெற்றார்.
ஒருநாள் சிதம்பர சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதரிடம், ""இனி உன் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்'' என்றார். ""குருவே நான் கற்ற வித்தைகள் எல்லாம் எனக்கு கைவரப் பெற்றனவா என்பதை எவ்விதம் அறிவது?'' என்றார் முத்துசுவாமி தீட்சிதர்.
""கங்கைக்குச் சென்று இரு கைகளிலும் நீரை அள்ளி, இஷ்ட தெய்வத்தை வணங்கி, மனதில் ஒன்றை நினைத்து, கையிலுள்ள நீரைப் பார்த்தால், அதில் நீ நினைத்தது தெரிந்தால் மந்திர சக்தி அடைந்ததாக அறியலாம்'' என்றார். முத்துசுவாமி தீட்சிதரும் கங்கைக்குச் சென்று நீரை முகர்ந்து, வீணையை நினைத்து, கண்களைத் திறந்து பார்த்தால்... என்ன ஆச்சரியம்! கை நீரில் வித்தியாசமான வீணை உருவம் தெரிந்தது. வீணையில் ஸ்ரீ ராம் என்றும் பொறிக்கப்பட்டிருந்தது.
சந்தோஷமாகக் காசியிலிருந்து புறப்பட்டு, திருத்தணி வந்து, முருகனை வணங்கி, "ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி' என்ற தனது முதல் பாடலைப் பாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...