பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஹலோ... ஆம்புலன்ஸை?

இங்கிலாந்தின் லிசெஸ்டெர்ஷயர் நகரம். முற்பகல் 11.30.  ஒரு மாதத்துக்கு முன்பு. அங்குள்ள அவசர மருத்துவ உதவிக்கான "ஈஸ்ட்

News image
Updated On :6 ஏப்ரல் 2014, 4:42 am

நிகில்

இங்கிலாந்தின் லிசெஸ்டெர்ஷயர் நகரம். முற்பகல் 11.30.  ஒரு மாதத்துக்கு முன்பு. அங்குள்ள அவசர மருத்துவ உதவிக்கான "ஈஸ்ட் மிட்லேண்ட் ஆம்புலன்ஸ் சர்வீஸ்' அலுவலக போன் ஒலிக்கிறது. ""ஹலோ'' என்று போனை எடுத்தால், எதிர்

முனையில் மழலைக் குரல்.

""அம்மா தரையிலே கிடக்கிறாங்க''

ஆம்புலன்ஸ் பணியாளருக்கு ஒரு விநாடி என்ன செய்வதென்று தெரியவில்லை. கொஞ்சம் யோசித்து, போன் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து, பறந்து சென்றால் பூட்டிய வீட்டின் உட்புற ஜன்னலில் ஓர் இரண்டு வயதுச் சிறுவன் நிற்கிறான், அவர்களை எதிர்பார்த்து.

காவல்துறை உதவியுடன் கதவை உடைத்துத் திறந்து பார்த்தால், மயங்கிய நிலையில் 27 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தரையில் கிடக்கிறாள். அவசர அவசரமாக ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, பெண்ணைச் சோதித்துப் பார்த்துவிட்டு டாக்டர் சொல்கிறார்:  ""இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்''

27 வயதுள்ள அந்தப் பெண் டானா ஹென்ரி. அவருடைய கணவர் ராப் வார்ட். இரண்டு குழந்தைகள். ஐந்து வயது பெண் குழந்தை கெய்ட்லினும், இரண்டு வயது ரிலைஸூம்.

""தேநீர் தயாரித்துவிட்டு அருந்தலாம் என்று ஷோபாவில் அமர நடந்து வந்தபோது அப்படியே தலை சுற்றி விழுந்துவிட்டேன். சிறிது நினைவு வந்தபோது, போலீஸ்காரர் கதவை உதைத்துத் திறக்க முயற்சிப்பது தெரிந்தது. கணவர் ராப் வார்ட் வெளியே போயிருந்தார். கெய்ட்லின் பள்ளிக்குச் சென்றிருந்தாள். ரிலைஸ் என்ன ஆனான் என்பதே எனக்குள் அப்போது எழுந்த முதல் கேள்வி. சிறிது நேரத்தில் காவல்துறையினரும், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்களும் வீட்டுக்குள் வந்துவிட்டனர். படுத்தபடியே திரும்பிப் பார்த்தால், ரிலைஸ் காவல்துறை அதிகாரியுடனும், ஆம்புலன்ஸ் உதவியாளரிடமும் ஏதோ சொல்லி, சிரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பின் மீண்டும் நினைவு தப்பி விட்டது'' என்கிறார் டானா.

மருத்துவமனையில் சேர்த்த பின்புதான் அவரது உடலுக்கு என்ன நேர்ந்திருந்தது என்பது தெரிய வந்திருக்கிறது.

""என்னுடைய கருப்பையில் பெரிய ரத்தக் கட்டி இருந்திருக்கிறது. அதிக அளவில் ரத்தப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் மயக்கமடைந்துவிட்டிருக்கிறேன். நான் மயங்கியவுடன் ஆம்புலன்ஸ் நம்பரான 999 - க்கு ரிலைஸ் போன் செய்திருக்கிறான். அம்மா மயங்கிய நிலையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அவசர உதவி ஆம்புலன்ஸ் எண்ணையும் நினைவில் வைத்திருந்திருக்கிறான். என் குழந்தை என் உயிரைக் காப்பாற்றிவிட்டான். இந்த அவசர உதவி எண்களையெல்லாம் அவனுக்கும் அவனுடைய அக்காவுக்கும் நாங்கள் விளையாட்டாகச் சொல்லிக் கொடுத்திருந்தோம். அது தகுந்த நேரத்தில் உதவி விட்டது'' என்கிறார் பெருமையாக டானா.

ஆம்புலன்ஸ் உதவியாளர் பால் ஸ்டேபிள்ஸ், ""999 எண்ணுக்கு ஒரு குழந்தை டயல் செய்கிறான், அதுவும் அவனுடைய அம்மா கீழே கிடப்பதாக என்றதுமே, காப்பாற்ற வேண்டியது அவனையும், அவனுடைய அம்மாவையும்தான் என்று நினைத்தேன். அவர்களுடைய வீட்டுக்கருகில் போகும்போது ஒரு பெரிய புன்னகையுடன் எங்களை எதிர்பார்த்து அவன் நின்றிருந்தான். வீட்டுக்குள் போனதும் அந்தப் பையன் நான் கொண்டு சென்றிருந்த மருத்துவக் கருவிகளை எல்லாம் ஒருதரம் நோட்டம் விட்டான். அதற்குப் பின்பு அவன், அம்மாவின் அருகே வந்து நாங்கள் என்ன செய்கிறோம் என்று பார்த்தான். என் வாழ்நாளில் இவ்வளவு புத்திசாலிக் குழந்தையைப் பார்த்ததில்லை'' என்கிறார்.

மிகக் குறைந்த வயதில் ஆம்புலன்ஸூக்குப் போன் செய்தவன் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் ரிலைஸ், அதற்கான சான்றிதழையும் பெறப் போகிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.