தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எழுத்துக்குப் பின்னால்...: இளம் வயதில் மனைவியை இழப்பது பெரும் துயரம்...

1935ஆம் ஆண்டு முதல் 1989 - ஆம் ஆண்டு பிரபல ஆங்கில நாவலாசிரியர் கிரஹாம் கிரீன் மறையும் வரை ஆர்.கே.நாராயணனுக்கும்

News image
Updated On :24 ஆகஸ்ட் 2014, 5:11 am

பூா்ணிமா

1935ஆம் ஆண்டு முதல் 1989 - ஆம் ஆண்டு பிரபல ஆங்கில நாவலாசிரியர் கிரஹாம் கிரீன் மறையும் வரை ஆர்.கே.நாராயணனுக்கும் அவருக்கும் இருந்த நட்பு மிகவும் அபூர்வமானதாகும்.

1930ஆம் ஆண்டு லண்டன் பதிப்பகமொன்றுக்கு ஆர்.கே.நாராயணன் அனுப்பிய நாவலொன்று நிராகரிக்கப்பட்டது. தன்னுடைய நண்பர் கிட்புர்ணா மூலம் நாராயணைப் பற்றிக் கேள்விப்பட்ட கிரஹாம் கிரீன், பதிப்பகத்தாரால் நிராகரிக்கப்பட்ட நாவலின் கையெழுத்துப் பிரதியை வரவழைத்துப் படித்துப் பார்த்தார். இவரது எழுத்தின் திறமையை உணர்ந்த கிரீன், நாவலை தானே எடிட் செய்து தலைப்பையும் மாற்றினார். "" ராசிபுரம் கிருஷ்ணசாமி ஐயர் நாராயணசாமி' என்ற பெயரை வாசகர்கள் நினைவில் வைக்க சிரமம் ஏற்படுமென கருதி, இவரது பெயரையும் "ஆர்.கே.நாராயணன்' என்று சுருக்கி, வெளியிட மறுத்த அதே பதிப்பகத்துக்கு அனுப்பிவைத்தார். இவரது முதல் ஆங்கில நாவலை அதே பதிப்பகம் வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து நேரில் சந்திக்காமலேயே இருவருக்கும் கடிதம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. 1937 ஆம் ஆண்டு ஆர்.கே. நாராயணின் 33 வது வயதில் அவரது மனைவி இறந்தபோது, கிரஹாம் கிரீன் இவருக்கு எழுதிய கடிதத்தில், "" இளம் வயதில் மனைவியை இழப்பது எத்தனை துயரமென்று எனக்குத் தெரியும் இதனால் தங்கள் எழுத்துப் பணி பாதிக்குமென்று நான் கருதவில்லை. உங்கள் வாசகர்களை இழக்க விரும்ப மாட்டீர்களென கருதுகிறேன். உங்களிடமுள்ள திறமைக்கு மேலும் சிறந்த நாவல்களையும் சிறுகதைகளையும் எதிர்பார்ப்பவர்கள் நிறையவே இருக்கலாம், உங்களுடைய எழுத்துப் பணி எவ்வித பாதிப்புமின்றி தொடருமென எதிர்பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

கடிதங்கள் மூலம் தங்கள் நட்பை வளர்த்துக் கொண்ட நாராயணன், 1964 ஆம் ஆண்டு லண்டன் சென்றிருந்தபோது ஒரே ஒரு முறைதான் கிரஹாம் கிரீனை சந்தித்து பேசினாரே தவிர, கிரஹாம் கிரீன் இந்தியாவுக்கு வந்து நாராயணனை ஒரு முறை கூட சந்திக்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.