மாவிலைத் தோரணம்
செவ்வாய்கிழமையும், சனிக்கிழமையும் மாவிலைத் தோரணம் கட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம். கட்டப்பட்ட தோரணத்தைக் காய்ந்து உதிரும்


செவ்வாய்கிழமையும், சனிக்கிழமையும் மாவிலைத் தோரணம் கட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம். கட்டப்பட்ட தோரணத்தைக் காய்ந்து உதிரும் வரை அவிழ்க்கக் கூடாது.
மாவிலைத் தோரண மகிமையை விட மருத்துவ மகிமை அதிகமானது. மாவிலைக்குத் துவர்ப்பு உண்டாவதால் நாடி நரம்புகளையும், தசைநார்களையும் சுருக்கி ரத்தம் வடிதல் முதலியவற்றை நிறுத்தக் கூடிய சக்தி உடையது.
மாந்தளிர் இலைகளைச் சேகரித்து உலர்த்தி இடித்து தூள் செய்து தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கோப்பை சுத்தநீரில் போட்டுக் கொதித்த பின் ஆறவைத்துக் குடித்து வர சிலதினங்களில் நீரிழிவு வியாதி குணமாகும்.
தொண்டைக் கட்டுக்கு பச்சை மாவிலையைக் கிள்ளி நெருப்பில் போட்டால் புகைவரும். அந்தப் புகையை வாயை அகலத் திறந்து பிடித்தால் தொண்டைக் கட்டு நீங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...