92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புள்ளிவிவரம்... புள்ளிவிவரம்

ஜெனரல் ஸ்மட்ஸ் என்பவர் தென்னாப்பிரிக்காவின் பிரதமராக இருந்தவர். பார்லிமென்டில் பேசுவதற்கு அவருக்கு ஒரு புள்ளிவிவரம் தேவைப்பட்டது.

News image
Updated On :6 ஜூலை 2014, 4:36 am

த.சீ.பாலு

ஜெனரல் ஸ்மட்ஸ் என்பவர் தென்னாப்பிரிக்காவின் பிரதமராக இருந்தவர். பார்லிமென்டில் பேசுவதற்கு அவருக்கு ஒரு புள்ளிவிவரம் தேவைப்பட்டது. மறுநாள் அதைப் பற்றி பேசியாக வேண்டும். தம் செயலாளரைக் கூப்பிட்டு, ""இந்தப் புள்ளிவிவரம் எனக்குத் தேவை. எதிர்க்கட்சிக்காரர்களை இதைக் கொண்டுதான் நாளைக்குத் திணற அடிக்கவேண்டும்'' என்றார்.

செயலாளர் திகைத்தார். நாளைக்கா? இந்தப் புள்ளிவிவரங்களைச் சேர்ப்பதற்குக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகுமே'' என்றார். ""ஐந்து ஆண்டுகளா? நாளைக்கு எனக்கு வேண்டுமே, சரி, நீங்கள் போகலாம்'' என்று சொல்லிவிட்டார் ஸ்மட்ஸ். அந்தப் புள்ளிவிவரத்தைப் பற்றிப் பேசமாட்டார் என்றே நினைத்தார் செயலாளர். ஆனால் மறுநாள் என்ன நடந்தது தெரியுமா? பாராளுமன்றத்தில் ஆச்சரியப்படத்தக்க வகையில் பேச்சு முழுவதும் புள்ளிவிவரமாகவே பேசித் தள்ளிவிட்டார் ஸ்மட்ஸ்.

பேச்சு முடிந்தது. செயலாளர் வந்தார். ஸ்மட்ûஸத் தனியாகச் சந்தித்து, ""இந்தப் புள்ளிவிவரங்களை ஒரே இரவில் எப்படிச் சேகரித்தீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறதே'' என்றார். ஸ்மட்ஸ் குறும்பாகச் சிரித்தார். பின்பு, ரகசியக் குரலில், ""இந்த விவரங்களைச் சேகரிக்க அரசினருக்கே ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று சொன்னீர்கள். அவர்களுக்கே அப்படியென்றால் எதிர்க் கட்சியினருக்கு இவை உண்மைதானா என்று கண்டுபிடித்து என்னை மடக்குவதற்குள் நான் நிச்சயமாக இந்தப் பதவியில் இருக்கமாட்டேன்'' என்றார். எப்படியுள்ளது புள்ளிவிவரம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.