""அவரு ஏன் தேர்தல்ல நிக்கறாரு?''
""நாற்காலியில உட்காரத்தான்!''
""நம்ம பையன் தொடர்ந்து பரீட்சையிலே முட்டை வாங்கி வர்றானே?''
""நீங்க தொடர்கதை எழுதரவங்க! உங்க மாதிரிதானே உங்க பையனும் இருப்பான்?''
""எங்க டாக்டர், பேஷன்ட் ஆபரேஷன் தியேட்டருக்கு போவதற்கு முன்னதாகவே ரோஜாப்பூ மாலையைக் கழுத்திலே போட்டுடுவார்!''
""இந்தப் புலி ரொம்ப அழகா இருக்கு!''
""நான் சுட்ட புலி சம்பந்தி! வைக்கோலை அடச்சு வச்சிருக்கேன்!''
""குட்டி போட்டா ஒண்ணு குடுங்க!''
""இது எப்படி சம்பந்தி குட்டி போடும்?''
""அட, போட்டா ஒண்ணு குடுய்யா?''
""அப்பா! நம்ம நெலத்தை ஏலம் போடறாங்க!''
""அட போடா! நெல்லு போட்டேன் விளையல, கொள்ளு போட்டேன் விளையல, ஏலம் போட்டா விளையப் போவுது?''
மாஜிஸ்ட்ரேட்: ""ஏம்பா? நீ பசுமாட்டைத் திருடினதா கம்ப்ளைண்ட் குடுத்திருக்கிறாரே!''
திருடன்: ""எஜமான் நான் ஒரு பாவமும் அறியேனுங்க! நான் ஒரு முழம் கயித்தை திருடினேனுங்க! அதன் நுனியிலே ஒரு பசுமாடு இருந்ததை நான் கவனிக்கலேங்க!''
திருடன் முதன்முதலில் தன் பிள்ளையை ரயிலேற்றிவிடும்போது:
""எதுவும் ஆபத்துன்னா செயினைப் புடுச்சி இழு!''
""யாரு கழுத்துல கெடக்கிற செயினை அப்பா?''
""ரூபாய் பத்தாயிரம் கொடுத்து இரண்டு வருஷம் ஆவுது! எப்பதான் குடுக்கப் போறீங்க?''
""அதற்குத்தான் புளியாங்கொட்டை போட்டிருக்கேன். முதல் புளி உங்களுக்குத்தான்...''
""அது சரி! ராமசாமிகிட்டே வாங்கிய முப்பதாயிரம்?''
""ஏன் பேசமாட்டீங்க? உங்க கடனுக்குதான் வழிபொறந்திடுச்சே!''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பெண்களுக்கு வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர் பணி: 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
குழந்தைத் தொழிலாளர்களா? திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!
ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



