கண்ணே சுபத்ரா...
சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு கொண்டவர் வ.வே.சு. ஐயர். "பரத்துவாஜ' ஆசிரமத்தை நடத்தி வந்த அவர் 1925ஆம்


சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு கொண்டவர் வ.வே.சு. ஐயர். "பரத்துவாஜ' ஆசிரமத்தை நடத்தி வந்த அவர் 1925ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் நாள் தமது ஆசிரம மாணவர்களுடன் நீர்வீழ்ச்சியைக் காண பாபநாசத்திற்கு புறப்பட்டார். அவர் செல்வமகள் சுபத்திராவும் உடன் வருவதாக அடம்பிடித்தார். அவரும் அழைத்துக்கொண்டு சென்றார்.
பாபநாசத்தில் ஏறக்குறைய 80அடி உயரத்திலிருந்து விழுந்து கொண்டிருக்கிறது "கல்யாண அருவி'. மாணவர்கள் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். சிலர் பாறையின் மேல் அருவியின் இரு பக்கங்களிலும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
சுபத்திராவுக்குத் தானும் அப்படிச் செல்ல வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. தந்தை மறுத்தார். அருவியின் பயங்கரத்தைப் பற்றி எவ்வளவோ சொல்லி பார்த்தார். மகள் கேட்கவில்லை. கடைசியில் அவள் விருப்பப்படி இணங்கினார் ஐயர். மாணவர்களின் நினைவு வந்தது அவருக்கு. சுபத்திராவை ஒரு பாறையின் மேல் நிறுத்திவிட்டு மாணவர்களைத் திரும்பிப் பார்த்தார். அவ்வளவுதான் சுபத்திரா வழுக்கிக் கொண்டு அருவியில் விழுந்துவிட்டாள். அவளது "ஐயோ, அப்பா' என்ற பரிதாபமான இறுதிக் குரல் நெஞ்சைப் பிளந்தது. ""சுபத்திரா'' என்று அலறிக் கொண்டு மகளைப் பிடிக்க அவரும் அருவியில் தாவினார்.
(ஆதாரம்: 100 மறக்க முடியா நிகழ்ச்சிகள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...