தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நாம் கால்களை குறுக்காக மடக்கி சம்மணம் போட்டு தரையில் உட்காரும் போது, இயல்பாகவே ஆசன நிலைக்கு வந்துவிடுகிறோம்.


நாம் கால்களை குறுக்காக மடக்கி சம்மணம் போட்டு தரையில் உட்காரும் போது, இயல்பாகவே ஆசன நிலைக்கு வந்துவிடுகிறோம். இதற்கு "சுகாசனா' அல்லது "பாதி பத்மாசனா' என்று பெயர். இந்த முறையில் அமைதியாக சாப்பிட உட்காரும்போதே ஜீரணத்துக்கு தயாராகுமாறு மூளைக்கு தகவல் சென்றுவிடுகிறது. சாப்பிடும் தட்டு தரையிலிருப்பதால் நாம் இயல்பாகவே குனிந்து, நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால் வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வைக்கிறது.
பத்மாசன நிலையில் இருக்கும் போது வயிற்றைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைவதால், அந்த இடத்தில் ஏற்படும் வலிகள் குறைகின்றன. மேலும் இந்த ஆசன நிலையில் வயிறு அழுத்தப்படாமல் இருப்பதால் ஜீரணசக்தி அதிகரிக்கிறது.
நாம் தரையில் நேராக அமர்ந்து சாப்பிடும்போது. முதுகெலும்பும், தோள்களும் சீரான நிலையில் இருக்கின்றன. இதனால் தாறுமாறான நிலையில் உட்காருவதால் ஏற்படும் வலிகளும், அசதியும் நீங்கிவிடுகின்றன.
தரையில் அமர்வதால் முழங்கால் மூட்டுகளும், இடுப்பு எலும்புகளும் வலுவடைகின்றன. அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால் இவை மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதால் நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...