என்னுடைய நடிப்பில் பெற்றோரின் சாயல் இருக்காது: அக்ஷ்ரா
கடந்த ஆண்டுகளில் படங்களில் நடிக்க வந்த அழைப்புகளை ஏற்க மறுத்த அக்ஷ்ரா ஹாசன், டைரக்டர் பால்கி


கடந்த ஆண்டுகளில் படங்களில் நடிக்க வந்த அழைப்புகளை ஏற்க மறுத்த அக்ஷ்ரா ஹாசன், டைரக்டர் பால்கி அழைத்தபோது அவருடன் துணை டைரக்டராகப் பணியாற்றவே அழைப்பதாக நினைத்தாராம்.
மணிரத்னத்தின் "கடல்' படத்தில் நடிக்க வந்த அழைப்பை மறுத்த அக்ஷ்ரா, அதன் பின்னர் அவரது தாயார் நடித்த "சொசைட்டி(2010) ' படத்தில் உதவி டைரக்டராகவும், அவரது தந்தை கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திலும் உதவி டைரக்டராகவும் பணியாற்றிய அக்ஷ்ரா,
பால்கியின் அழைப்பை ஏற்று அமிதாப்பச்சன், தனுஷுடன் "ஷமிதாப்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இளங்கன்று பயமறியாது என்பது போன்று தன்னைப் பற்றியும் தனது நண்பர்கள், புட் பால், வீடியோ கேம் மற்றும் தனக்குப் பிடித்தவற்றைக் குறித்தும் இங்கு விவரிக்கிறார்.
""நான் முதன்முதலாக பால்கியின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது எதிர்பாராத சம்பவமாகும். இருப்பினும் படப்பிடிப்பின்போது என்னுடைய குறுக்கீட்டை அவர் தடுக்கவில்லை. "இது இயற்கையாக வரும் என்று நீ விரும்பினால் அதன்படியே நடிக்கலாம். ஒருவேளை பொருத்தமாக இல்லை என்றால் வேறொரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று கூறினார்.
அமிதாப்பச்சனும் தனுஷும் எனக்கு வழிகாட்டியாக இருந்தாலும் நான் அவர்களை கேள்வி கேட்க அனுமதித்தனர். ஒவ்வொரு காட்சியையும் முன்னதாகவே என்னுடைய அம்மாவிடம் கூறி ஆலோசனை கேட்டேன். அவர்கள் கூறும் கருத்தை மறுநாள் பால்கியிடம் கூறி, "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
சினிமாவைப் பற்றிய கருத்துகள் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தன. வித்தியாசமான கோணத்தில் முயற்சித்தபோது, ஆர்வம் அதிகரித்தது. எதைப்பற்றியும் பயப்பட வேண்டியதில்லை என்றே தோன்றியது. படப்பிடிப்பின்போது, நானும், தனுஷும் தமிழில்தான் பேசிக் கொள்வோம்.
ஆனால் என்னுடைய சகோதரி ஸ்ருதி ஹாசனைப் பற்றி அவரிடம் ஏதும் விவாதிப்பதில்லை. இந்தப் படத்தில் நடிக்க துவங்கியது முதல் எனக்குள் ஏதோ புத்துணர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு அதிகரித்தது.
எனக்கு வித்தியாசமான கேரக்டர்களை, ஸ்டெடி செய்வதில் மிகவும் விருப்பம். மனிதர்களின் பாடி லாங்குவேஜையும் கண்காணிப்பதுண்டு. என்னுடைய தந்தையைக் கூட நான் இமிடேட் செய்ததுண்டு. என்னுடைய தந்தை நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது "அன்பே சிவம்'. என்னுடைய மனதை தொட்ட படம் அது.
புகைப்படமெடுப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். மும்பை தெருக்களில் பல மணி நேரம் இதற்காகவே செலவழித்திருக்கிறேன். அதுவும் ஆள் அரவமற்ற ரோடுகள் } பெல்ஜியம் நகரத்தில் உள்ள அரண்மனைகள் } என பல இடங்களை என்னுடைய கேமிரா படமாக்கியுள்ளது.
பள்ளி நாட்களிலேயே எனக்கு புட்பால் ஆடுவதில் விருப்பம் இருந்தது. அதனால் ஏற்பட்ட காயம் காரணமாக என்னுடைய நாட்டியப் பயிற்சியை நிறுத்த வேண்டியதாயிற்று. எனக்கு பிடித்த ப்ளேயர்கள் லைனல் மெஸ்லி மற்றும் ஸ்டீவன் ஜெர்ராட்.
பயணம் செய்வதிலும் எனக்கு விருப்பம் உண்டு. புதிய நண்பர்களைச் சந்திக்கலாம். பிடித்த இடம் நியூயார்க். மூலை முடுக்கெல்லாம் எனக்கு நன்கு அறிமுகம். எனக்கு சாப்பாட்டை விட புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். என்னுடைய தந்தை வளர்த்து வரும் ஐந்து நாய்கள் மீது எனக்கும் விருப்பம் அதிகம். அவற்றுடன் நீங்கள் பழக நேர்ந்தால், அவை உங்களுடைய வாழ்க்கையையே மாற்றிவிடும். மும்பை அபார்ட்மெண்ட்டில் நான் வசிப்பதால் நாய்களை வளர்க்க சந்தர்ப்பமில்லை.
நான் மற்றவர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. எனக்கென்று குடும்பம் உள்ளது. என்னை நானே இழக்க வேண்டி வந்தாலும் அந்த நிலைக்கு என்னைத் தள்ள வேண்டாமென்று கூறியுள்ளேன். காலையில் எழுந்தவுடன் என்னை நானே பார்த்துக் கொள்வேன். எதை பார்க்கிறேனோ அது குறித்து மகிழ்ச்சியடைவேன். மனதுக்கு பிடிக்கவில்லை என்றால் எதையோ இழந்தது போலாகிவிடுவேன்.
எதையும் பரிசோதித்துப் பார்ப்பதில் விருப்பம் அதிகம். என்னுடைய தாயார் அவரது தலைமுடியைப் பராமரித்து வருவதுபோல் நானும் முயற்சிப்பதுண்டு. அவரைப் போலவே தலைமுடிக்கு பல்வேறு பின்னல்களைப் பயன்படுத்தியதுமுண்டு. வீடியோ விளையாட்டில் நாட்கணக்கில் பொழுதைக் கழிப்பேன். அதில் எனக்கு அலுப்பே ஏற்படுவதில்லை.
விரைவில் இயக்குநராக வேண்டுமென்ற விருப்பம் உள்ளது. அதற்கான தகுதி இருப்பதாகவே கருதுகிறேன். ஏற்கெனவே பல திரைக்கதைகள் கைவசம் உள்ளன. தமிழ் சினிமாக்களில் நிச்சயம் நடிப்பேன். வாய்ப்புக் கிடைத்தால் விட்டுவிட மாட்டேன்.
என்னுடைய கண்களைப் பற்றி பலரும் கேட்பதுண்டு. இதுபற்றி என்னுடைய குடும்பத்தார்கூட ஆச்சரியப்பட்டதுண்டு. என்னைப் பொறுத்தவரை என் கண்களின் நிறம் பச்சை என்றே நினைக்கிறேன்''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...