தற்காப்பு கலைகளில் உலக அளவில் பரவியிருப்பது கராத்தே. தமிழகத்தில் பல தனியார் பள்ளிகளில் கராத்தே பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
கராத்தே பயிற்சி அளிக்க பல தனியார் பயிற்சி நிலையங்களும் உள்ளன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவர் ஜெ.எல்.பிரசன்னகுமார் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் இரண்டாமிடம் பெற்று, ஆசிய அளவில் டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள கராத்தே போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். இவருக்கு பயிற்சி அளித்து வரும் அகில இந்திய கராத்தே பயிற்சியாளர் எம்.செபஸ்டின் இந்த மாணவரின் வெற்றி குறித்து கூறியதாவது:
""பிரசன்னகுமார் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது கராத்தே பயிற்சி பெறத் தொடங்கினார். சொல்லிக் கொடுப்பதை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் அவரிடம் உள்ளது எனக்குத் தெரியவந்தது.
அவர் மூன்றாம் வகுப்பு படித்தபோது, எட்டு வயதுப் பிரிவில் குமித்தே பிரிவில் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்தார். தொடந்து அவர் மஞ்சள், பச்சை,ஊதா ஆகிய வண்ண பெல்ட்டுகளைப் பெற்றார்.
கராத்தே மற்றும் குங்பூ தேசிய அளவிலான போட்டி சென்னையில் 2015 ஜூலை மாதம் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற்றது. அதில் அவர் குமித்தே பிரிவில் தில்லி மாணவரிடம் மோதினார்.
இதில் அவர் இரண்டாமிடம் பெற்றார். இதைத் தொடந்து வரும் டிசம்பர் மாதம் 25, 26, 27ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஆசிய கராத்தே போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளார். கராத்தேவில் குமித்தே, கட்டா ஆகிய இருபிரிவிலும், தனிநபர் மற்றும் குழு போட்டிகள் நடைபெறும். குமித்தே என்பது எதிரியைக் காலால் உதைப்பது ஆகும். இதில் பிரசன்னகுமார் எதிரியின் தலை வரை காலைக் கொண்டு சென்று தாக்கும் வல்லமை பெற்றுள்ளார்.
இவரது தனித்திறமையை நான் உணர்ந்த பின்னர், குமித்தேவில் அவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கத் தொடங்கினோன்.
சர்வதேச கராத்தே விதிகளுக்கு உட்பட்டு பயிற்சி அளித்தேன். எதிரி தாக்க வரும்போது கையால் தடுப்பது, காலால் உதைப்பது என தனித்திறமை பிரசன்னகுமாரிடம் உள்ளது.
பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டு விழாக்களில் அந்த மாணவரின் திறமையை நான் கண்டு கொண்டேன். பின்னர் அவரிடம் உனக்கு நல்ல திறமை உள்ளது. உன்னால் முடியும் என தன்னம்பிக்கை ஊட்டி பயிற்சி அளித்தேன்.
ஒவ்வொரு நாள் விளையாட்டின் போதும், நான் அவரை ஊக்கப்படுத்திவந்தேன். அதற்கு நல்ல பலன்கிடைத்தது.
பலர் பயிற்சி பெற்று வந்தாலும், ஊக்கப்படுத்தினால், பயிற்சியாளர் என்றால் இப்படித்தான் கூறுவார்கள் என எண்ணி திறமையை முடக்கிவிடுவார்கள்.
ஆனால் பிரசன்னகுமார், என்மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் என அடிக்கடி கூறுவதுண்டு. இந்த தன்னம்பிக்கைதான் அவரை ஆசியப்போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது என கூறலாம்.
ஆசியப்போட்டியிலும் வெற்றி பெற்று சர்வதேச போட்டியில் கலந்து கொள்வார் என நம்புகிறேன்'' என்றார் செபஸ்டின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


