புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

முயற்சியில்லாமல் எதையும் சாதிக்க முடியாது! - ஏக்தா கபூர்

டிவி தொடர்கள், திரைப்பட தயாரிப்பு, ஈகே பேஷன் நிறுவனம் என பல துறைகளில் ஆண்களுக்கு சமமாக தைரியமாக நுழைந்து புதிதாக இத்துறைகளுக்கு வருபவர்களுடன் ஈடுகொடுத்து சாதனை படைத்துவரும் ஏக்தா கபூர், பழம்பெரும் இந்தி நடிகர் ஜிதேந்திராவின் மகள்.

News image
Updated On :6 பிப்ரவரி 2016, 2:19 pm

பூா்ணிமா

டிவி தொடர்கள், திரைப்பட தயாரிப்பு, ஈகே பேஷன் நிறுவனம் என பல துறைகளில் ஆண்களுக்கு சமமாக தைரியமாக நுழைந்து புதிதாக இத்துறைகளுக்கு வருபவர்களுடன் ஈடுகொடுத்து சாதனை படைத்துவரும் ஏக்தா கபூர், பழம்பெரும் இந்தி நடிகர் ஜிதேந்திராவின் மகள். தன் தந்தை நடத்திவந்த திருப்பதி பிக்சர்ஸ், பாலாஜி டெலிபிலிம் நிறுவனங்களை ஏற்று நடத்தி பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்து வழங்கிய இவர் தன்னுடைய அனுபவங்களை விவரிக்கிறார்:

""போகும் இடத்தை தீர்மானிக்காமல் ரயிலில் ஏறுவது எவ்வளவு தவறோ, அதே போன்றது எவ்வித முயற்சியும் எடுக்காமல் வாழ்க்கையில் சாதிக்க நினைப்பது என்பதை முதலில் உணர வேண்டும். என்னுடைய 18வது வயதில் இந்த துறையில் நான் நுழைந்தபோது எந்தவித அனுபவமும் எனக்கில்லை. டிவி துறையில் அனுபவம் இல்லாத புதியவர்களை வைத்து துணிந்து பரிசோதனையில் இறங்கினேன். அந்த நேரத்தில் மகாபாரதத்தை தொடராக எடுக்க வேண்டுமென்று நினைத்து மற்றவர்களுக்கு வாய்ப்பளித்ததுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. இதனால் ஏகப்பட்ட பணவிரயம். அதன்பின்னர் துணிந்து எடுத்த "ஜோதா அக்பர்' மூலம் இழந்ததை, திரும்ப பெற்றேன்.

தயாரிப்புப் பணிகளிலேயே மும்முரமாக இருந்தாலும் இடையில் என்னுடைய தேவைகளை நான் கவனித்து கொள்ள தவறுவதில்லை. ""நீங்களே, ஏன் திரைப்படங்களிலும், டிவி

தொடர்களிலும் நடிக்கக் கூடாது'' என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு. அதற்கு நேரம் இல்லை. மேலும் என்னுடைய முகத்தை யார் ரசிப்பார்கள்? சில நேரங்களில் வேலைப்பளு அதிகரிக்கும்போது என்னுடைய வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்க இதுவும் ஒரு பகுதி என்றே கருதுவேன்.

என்னுடைய டிவி தயாரிப்புகளான "என் கணவன் என் தோழன்' (விஜய் டிவி), "உறவே உயிரே' (பாலிமர் டிவி) போன்ற தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கு நானே உடைகளை வடிவமைத்து கொடுப்பேன். இது ரசிகைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, அதுபோன்ற ஆடைகள் எங்கு கிடைக்கும் என்று விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போதுதான் இந்த உடைகளை அதிக அளவில் தயாரித்து ஏன் விற்பனை செய்யக் கூடாது என்ற எண்ணம் மனதில் உதித்தது. அதன் விளைவே " ஈகே' ஆடை தயாரிப்பு நிறுவனம். ரசிகைகளின் நம்பிக்கைக்கேற்ப உடைகளை வடிவமைக்கிறேன். விற்பனை செய்கிறேன்.

பாலிமர் டிவியில் ஒளிப்பரப்பாகும் "மௌனராகம்', "உள்ளம் கொள்ளை போகுதே' போன்ற என்னுடைய டிவி தொடர்களை பார்க்கும் சிலர், தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை, காதலித்து திருமணம் செய்து கொண்ட எதிர்ப்புகளை என்னிடம் கூறி பகிர்ந்து கொள்வதுண்டு. சிலரது கதைகள் கண்ணீரை வரவழைக்கும். அவற்றை அடிப்படையாக வைத்தும் தொடர்களைத் தயாரித்துள்ளேன்.

"நாச்சே பலியே 7' என்ற ரியாலிடி ஷோவை தற்போது நடத்திவருகிறேன். உண்மையில் இந்திய ரசிகர்கள், சமூகவலை தளங்களில் சந்திப்பவர்களைவிட மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு பரிசோதனைதான். ஆனால் முயற்சி செய்யாமல் எதையும் சாதிக்க முடியாது. இதை நான் செய்யவில்லை என்றால் இந்தத் துறையில் பின்தங்க நேரலாம்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு "3 இடியட்ஸ்', "கிக்', "2 ஸ்டேட்ஸ்' போன்ற படங்களுக்கு திரைக்கதை அமைத்த சேத்தன் பகத்தை நீதிபதியாக அமர்த்தியுள்ளேன். ரசிகர்களுக்கு இவரது பெயர் தெரியுமே தவிர நேரில் பார்த்ததில்லை. இது கூட ஒருவகையில் முயற்சிதான்'' என்கிறார் ஏக்தா கபூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.