சாலையில் படுத்து உறங்கிய அர்னால்ட்!

விசித்திரமான முடிவுகளை சிலர் எப்போது எடுப்பார்கள்.. எப்போது அதை நடைமுறைப் படுத்துவார்கள் என்று கணித்து சொல்ல முடியாது. ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவின் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளூநருமான அர்னால்ட் ஷெவாஸ்நெக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்.
சாலையில் படுத்து உறங்கிய அர்னால்ட்!

விசித்திரமான முடிவுகளை சிலர் எப்போது எடுப்பார்கள்.. எப்போது அதை நடைமுறைப் படுத்துவார்கள் என்று கணித்து சொல்ல முடியாது. ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவின் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளூநருமான அர்னால்ட் ஷெவாஸ்நெக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்.

அண்மையில், அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. படுக்கையைச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பியவர், நேரே கொலம்பஸ் கன்வென்ஷன் சென்டருக்கு வந்தார்.

அங்கே 2014ல் நிறுவப்பட்ட அவரது வெண்கலச் சிலைக்குப் பக்கத்தில் சாலை ஓரம் படுக்கையை உதறினார்.... விரித்தார்..... அக்கம் பக்கம் பார்த்தார்...

பிளாங்கட்டில் கழுத்திற்குக் கீழ் தன்னைப் புதைத்துக் கொண்டு படுக்கையில் படுத்து தூங்க ஆரம்பித்தார். "நேற்றுவரை நல்லாத்தானே இருந்தார்.... இன்றைக்கு நம்ம அர்னால்டுக்கு என்ன ஆச்சு..' என்று பாதசாரிகள், காரில் போகிறவர்கள் மண்டை காய்ந்து போனார்கள்.

நேரில் அர்னால்டிடம் வந்து, ""என்ன இங்கே வந்து படுத்திருக்கிறீர்கள்.. என்ன விஷயம்.. என்று'' யாரும் விசாரிக்கவில்லை. டெர்மினேட்டர் அர்னால்டிடம் கேட்கவும் பயம்.. தயக்கம்... அர்னால்டின் உடல்வாகு காரணமாக பலரும் இரண்டு மூன்று அடி விலகியே நிற்பார்கள்.

அர்னால்ட் தான் தூக்கம் போடுவதை அல்லது தூக்கம் போடுவதாக நடித்ததை படம் பிடித்து "காலம் மாறிப் போச்சு..' (how  times  have  changed) என்ற தலைப்புடன் சமூக வலைத் தளங்களில் போட.... அது வைரலானது என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கலிபோர்னியாவில் வசிக்க சொந்தமாக வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதைச் சுட்டிக் காட்டவே சிம்பாலிக்காக அர்னால்ட் இப்படி தனது சமூகப் பொறுப்பை வெளிக் காட்டினார் என்று கூறப்படுகிறது.

அர்னால்ட் மீண்டும் கலிபோர்னியா ஆளுநர் பதவிக்குப் போட்டியிடப் போகிறாரா என்ன? அதற்குத்தான் சாலை ஓரம் உறக்கம் போடும் ஸ்டண்ட்டா? எது எப்படியோ , அர்னால்டிற்கு அரசியல்வாதிகளைப் போல் ஏதாவது செய்து விளம்பரம் தேடிக்கொள்ளத் தெரிந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com