தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சென்னையில் இருந்தே அரங்கனைச் சேவிக்கலாம்!

பஸ்ஸோ, ரயிலோ, விமானமோ பிடிக்கத் தேவையில்லாமல், சென்னையில் இருந்தபடியே திருவரங்கனைத் தரிசிக்க வழி செய்திருந்தார், டேக் மையம் ஆர்.டி. சாரி, அவரது குடும்ப அறக்கட்டளையான ராமு அறக்கட்டளை உதவியோடு.

News image
Updated On :13 மே 2016, 12:49 pm

சாருகேசி

பஸ்ஸோ, ரயிலோ, விமானமோ பிடிக்கத் தேவையில்லாமல், சென்னையில் இருந்தபடியே திருவரங்கனைத் தரிசிக்க வழி செய்திருந்தார், டேக் மையம் ஆர்.டி. சாரி, அவரது குடும்ப அறக்கட்டளையான ராமு அறக்கட்டளை உதவியோடு. ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலின் அத்தனை அம்சங்களையும் டி.டி.கே. சாலையில் உள்ள டேக் மையத்தில், புகைப்பட நிபுணர் ஜே. ரமணன் எடுத்த அரிய புகைப்படங்களாக இங்கே பார்வையாளர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

""திருமலையில் அரங்கநாதர், 1330 ஆம் ஆண்டு முதல் 1360 ஆம் ஆண்டு வரை வேங்கடவனின் விருந்தாளியாகத் தங்கியிருந்திருக்கிறார், தெரியுமோ? தொண்டரடிப்பொடி ஆழ்வார்

திருப்பள்ளி எழுச்சி, வேங்கடேச சுப்ரபாதத்துடன் அதிகாலையில் அப்போது இங்கே பாடப்பட்டது'' என்கிறார் ஆராய்ச்சியாளரும் அறிஞருமான டாக்டர் பப்பு வேணுகோபால் ராவ்.

""அன்னமாசாரியார் இரண்டு பாடல்களும், அவர் மகன் பெத்த திருமலாசார்யார் ஒரு பாடலும் ரங்கநாதர் மீது இயற்றியிருக்கிறார்கள். கிருத யுகத்தில் வரதராஜனாகவும், திரேதா யுகத்தில் ரங்கநாயகனாகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீ ஜகந்நாதனாகவும், கலியுகத்தில் வேங்கட நாயகனாகவும் ஆக நான்கு அவதாரங்கள் எடுத்திருக்கிறார் பெருமாள். எங்கேயாவது பகவானை பக்தன் வாழ்த்திக் கேட்டிருக்கிறீர்களா? பெரியாழ்வார் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' பாடியிருக்கிறார். ஸ்ரீ ராமானுஜர் சரணாகதி கத்யம், வைகுந்த கத்யம், ஸ்ரீரங்க கத்யம் என்ற மூன்று கத்யங்கள் சேர்ந்த "கத்ய த்ரயம்' இயற்றியிருக்கிறார். ஆதி சங்கரர் ஸ்ரீ ரங்கநாத அஷ்டகம் என்ற தோத்திரப் பாடல் இயற்றியிருக்கிறார்'' என்று விளக்கினார் டாக்டர் பப்பு வேணுகோபால் ராவ்.

""156 ஏக்கர் பரப்பளவில் ஒருபுறம் காவிரியும், இன்னொருபுறம் கொள்ளிடமுமாக, பாஞ்சராத்ர ஆகம முறைப்படி கட்டப்பட்ட பெரிய கோயில் இது'' என்கிறார் புகைப்படக் கலைஞர் ரமணன். ஏழு சுற்றுகள் அல்லது பிராகாரங்கள் உள்ள ஒரே கோயிலாம் இது. ""அதிலும் அகலங்க திருச்சுற்று முக்கியமானது. இதன் கிழக்கே புகழ் பெற்ற வெள்ளை கோபுரம் அமைந்து இருக்கிறது. வடக்குப்புறத்திலிருந்து தாயார் சந்நிதியை அடைந்து விடலாம். வெள்ளை கோபுரம் பகுதியிலிருந்து காட்டழகியசிங்கர் கோயிலை அடையலாம். காட்டிலிருந்து வந்து யானைகள் வந்து தாக்காமல் இருக்கக் கட்டப்பட்டது இந்தக் கோயில். ஏன் வெள்ளைக் கோபுரம் என்ற பெயர் வந்தது தெரியுமா? வெள்ளையம்மாள் என்ற தேவதாசி அரங்கன் மீது அந்நியர் கை வைத்துவிடலாகாது என்று அவர்களை திசை திருப்பிக் கீழே விழ வைத்து, பின் தானும் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டாள். அதனால்தான்'' என்கிறார்.

வடக்கேயிருந்து வந்த ஆட்சியாளர்களின் கையில் சிக்காமல் இருக்க 1323 ஆம் ஆண்டு முதல் 1371 ஆம் ஆண்டு வரை 48 ஆண்டு காலம் ஸ்ரீரங்கத்துக்கு வெளியேதான் பெருமாள் இருந்தார். நாவலாசிரியர் ஸ்ரீவேணுகோபாலன், தினமணி கதிரில் எழுதிய "திருவரங்கன் உலா' எங்களுக்கு உத்வேகம் தந்தது. கோயில் ஒழுகு இரண்டு பாகங்களும், வைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியான் நம்பெருமாள் வனவாசமும் தகவல்கள் தந்தன. 1311இலும் 1323இலும் நடந்த இரண்டு படையெடுப்புகளின்போது, பின்னது 48 ஆண்டுக்காலம் நீடித்ததால், அரங்கன் தென்னிந்தியா முழுக்க அவர் சீடர்களால் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டுக் காக்கப்பட்டார் என்கின்றன சரித்திர ஆய்வேடுகளும், பதிவுகளும்'' என்கிறார் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆஷா கிருஷ்ணகுமார்.

""ஸ்ரீரங்கத்தில் ஒவ்வொரு நாளும் உற்சவநாள்தான்'' என்கிறார் நிர்வாக இயல் நிபுணரும், பேச்சாளரும், எழுத்தாளருமான பிரதீப் சக்ரவர்த்தி. பிரம்ம உத்சவம், வசந்த உத்சவம், பவித்ர உத்சவம், தெப்ப உத்சவம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அப்புறம் இருக்கவே இருக்கிறது ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி. பக்தி இயக்கத்தின் பகுதிகளே இந்தக் கொண்டாட்டங்கள்'' என்கிறார் பிரதீப்.

""திருவரங்கன் கோயில், சங்க காலத்தில் கூட வழிபடப்பட்டதாகச் சரித்திர ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அகநானூற்றில் அரங்கனின் வர்ணனை பற்றி எழுதப்பட்டிருக்கிறது. ஏன் சிலப்பதிகாரத்திலும், அரங்கன் இதயத்தில் பிராட்டியை வைத்தபடி ஆயிரம் தலைகொண்ட அரவின் படுக்கையில் படுத்திருப்பதாக வந்திருக்கிறது, இல்லையா?'' என்று கேட்டார் கோயில் கட்டடக்கலை நிபுணரும், சொற்பொழிவாளருமான டாக்டர் சித்ரா மாதவன்.

""அரையர் சேவை இசையும், நடனமும் இணைந்தது. அது கோயிலின் வழிபாட்டில் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது'' என்கிறார் பேராசிரியர் மதுசூதனன் கலைச்செல்வன். இதுவும் பக்தி இயக்கத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. உள்ளூர் மொழியில் மக்களைச் சென்றடைய வைணவ மகான்களான ஆழ்வார்கள் பாடிய பாடல்களை விளக்கும் ஆடல் நிகழ்ச்சியாக அரையர் சேவை இருந்து வருகிறது. ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய கோயில்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது'' என்கிறார் பேராசிரியர் மதுசூதனன்.

இளைஞர் மதுசூதனன் கட்டடக் கலை வல்லுநர் மட்டுமல்ல. தரங்கம்பாடியில் டச்சுக் கோட்டை, தஞ்சை பெரிய கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகியவற்றைப் புதுப்பிப்பதில் பங்கு கொண்டவர். தற்போது திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலைப் புதுப்பிக்கும் பணியில் இவரது ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறார்கள். இவர் கர்நாடக இசை கற்றவர். மிருதங்கமும் வாசிப்பார்.

சிற்பக் கலை, கட்டடக் கலை, அவற்றின் அடிப்படைகள், தாக்கங்கள் இவை எல்லாவற்றையும் விளக்கும் இந்த பிரம்மாண்டமான புகைப்படக் காட்சி பார்வையாளர்களின் விழிகளுக்கு விருந்தாக இருந்ததாக பங்கு கொண்டவர்களே பெருமையோடு சொன்னார்கள்.

ஆழ்வார்கள் எல்லாருடைய படங்களும் இருக்க, ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் புகைப்படங்கள் மிஸ்ஸிங். அரங்கனையே மணந்த ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார். அதாவது அரங்கனின் மாமனார். (இந்தக் காலத்து மாமனார்களாக இருந்தால், ஏன் என் புகைப்படம் வைக்கவில்லை? என்று சண்டைக்கு வந்து வழக்கே போட்டிருப்பார்கள்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.