சஞ்சய்கானுக்கு  நேர்ந்த  சங்கடம்!

1970 -80களில் , ஹிந்திப் படவுலகின்  சூப்பர் ஸ்டார்  சஞ்சய்கான்,  நல்ல அழகு மற்றும்  சிறந்த  பர்சனாலிட்டி  உடையவர்.  இது அவரைச் சுற்றி  பெரிய வட்டத்தை  உருவாக்கியிருந்தது.
சஞ்சய்கானுக்கு  நேர்ந்த  சங்கடம்!
Updated on
1 min read

1970 -80களில் , ஹிந்திப் படவுலகின்  சூப்பர் ஸ்டார்  சஞ்சய்கான்,  நல்ல அழகு மற்றும் சிறந்த  பர்சனாலிட்டி உடையவர். இது அவரைச் சுற்றி  பெரிய வட்டத்தை உருவாக்கியிருந்தது.

இன்று சஞ்சய்கானுக்கு வயது 78.  இப்பவும்  நிஜ சூப்பர் ஸ்டார்  போல்தான் இருக்கிறார். அத்துடன் முதல் தடவையாக,  தன்னுடைய  வாழ்க்கை அனுபவங்களை  “THE  BEST  MISTAKES  OF MY LIFE’  என்ற   பெயரில்  புத்தகமாக எழுதியுள்ளார்.

இதிலிருந்து  ஒரு சுவையான  சம்பவம்: 

1980}இல்  இவர் நடித்த  "அப்துல்லா'   ஹிந்தி படம், துருக்கி  மொழியில்  மாற்றம்   செய்து வெளியிடப்பட்டது.  இதற்காக  நேரில்  சென்றிருந்தார் சஞ்சய்கான். அப்போது அவருடைய   கம்பீரத்தைப் பார்த்து பலர்  வியந்தனர்.  இதில் ஒருவர் பிரபல டான் டின்டார்கிலிக்,   அவருக்கு சஞ்சய்கானை  ரொம்ப  பிடித்தது.

அடுத்த நாள்  ஊர் திரும்ப  இருந்த  சஞ்சய்கானை  தன் மாளிகைக்கு அழைத்தார்.

மரியாதை நிமித்தம்  சென்றார் சஞ்சய்.

அங்கு டான்,   அவரிடம், ""இந்தியா,  பாகிஸ்தான்,  பங்களாதேஷ்,   ஸ்ரீலங்கா மற்றும் நேபாளத்துக்கு  போதை  மருந்து சாம்ராஜ்யத்தின்,  தலைவராக உங்களை  நியமிக்கின்றேன்''  என்றாராம்.

திடுக்கிட்ட  சஞ்சய்கான், சமாளித்து ""நான்  நேர்மையானவன்  நடிகர் மற்றும் கற்பனைவாதி.  ஆனால் பிசினஸ் தெரியாது.  அதில் நான் சைபர்.  உங்கள் பணம் முழுவதும் நஷ்டமாகிவிடும்''  எனக் கூற, டான்  அதனை நம்பி,  சஞ்சய்யை விடுவித்துவிட்டாராம்.  எப்படி இருக்கு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com