பேல்பூரி
""நேற்று, கொஞ்சம் பேசலாமேனு நெனச்சு வீட்டுக்கு வந்தேன். வீட்டுல , லைட் ஆஃப் ஆகி இருந்துச்சு ...ஒரு வேளை, கரண்டு பில் மிச்சப்படுத்துறாங்களோன்னு நெனச்சுட்டு, திரும்ப வந்துட்டேன்''


(தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடில் உள்ள ஒரு தெருவின் பெயர்)
ரேடியோ தெரு
குலசை நஜ்முத்தீன், காயல்பட்டினம்.
(மதகடிப்பட்டு - புதுவை சாலையில் உள்ள ஒரு தேநீர்க்கடையின் பெயர்)
ஆறாத டீ கடை
பி.சி.ரகு, பள்ளிச்சேரி.
(கரூர் மாவட்டம் குளித்தûலயிலிருந்து 35 கி.மீ.ùதாûலவில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
சிங்கப்பூர்
ஆர்.கே. லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.
(கோவை சின்னியம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டு திண்ணையில் இரு பெண்கள்)
""நேற்று, கொஞ்சம் பேசலாமேனு நெனச்சு வீட்டுக்கு வந்தேன். வீட்டுல , லைட் ஆஃப் ஆகி இருந்துச்சு ...ஒரு வேளை, கரண்டு பில் மிச்சப்படுத்துறாங்களோன்னு நெனச்சுட்டு, திரும்ப வந்துட்டேன்''
""அது ஒண்ணும் இல்ல ... ஊர் நியாயம் பேச, ஒரு ஏழரை வரும்னு சொல்லி , லைட்டை ஆஃப் பண்ணி வெச்சிருந்தோமாக்கும்''
?...?...?
இலக்கியா மகேஷ், கோவை.
(நெய்வெலி பஜாரில் சைக்கிள் கடையில்இருவர்)
"" பெட்ரோல் விலை ஏறிப்போச்சேன்னு சைக்கிள் வாங்குறீங்களா?''
""அதெல்லாம் இல்லை. பையனுக்காக வாங்குறேன்''
""உடம்பை ஃபிட்டா வச்சுக்கிற ஹெல்த் அவேர்னஸô?''
""அதெல்லாம் ஒண்ணுமில்லை. இந்த நாலு மாதத்தில், அவனுக்குப் பொழுது போகலை சார்... இப்போ சைக்கிள் ஓட்டணுமாம்... நாளைக்கே ஊரடங்கைத் தூக்கட்டும். சைக்கிளை மூலைல போட்டுட்டு, பைக்கை எடுத்துக்கிட்டு மால், தியேட்டர்னு போயிருவான். ஹெல்த்தாவது... அவேர்னஸாவது...''
இர. கிருத்திக்குமார், நெய்வெலி -3.
நீர் நிûலயும் மன நிûலயும் ஒன்றுதான்....
அடுத்தவர் குழப்பாதவரை!
- எம்.சுகாரா, திருவாடானை.
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். ""ஐந்து பழங்கள் பத்து ரூபாய்'' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். ""ஆறு பழங்கள் பத்து ரூபாய்'' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை. இதேபோன்று இன்னொரு பேருந்திலும் நடந்தது.
இதை மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ""அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால் தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, ""போய்யா... அவன் என் மகன். ஐந்து பழம் பத்து ரூபாய்ன்னு சொன்னா சனங்க எங்கிட்டே வாங்க மாட்டாங்க. ஆறு பழம் பத்து ரூபாய்ன்னு அடுத்த வர்ற என் மகன் சொன்னதும் அவன் விலை கம்மியா விக்கிறான்னு அவன்கிட்டே வாங்குவாங்க. மொத்தத்துக்கு வியாபாரம் நல்லா நடக்குது. நான் விற்றால் என்ன? என் மகன் விற்றால் என்ன? எல்லாம் ஒண்ணுதானே?'' என்றார்.
இந்த மாதிரி தந்திரங்களை எல்லாம் தான் படித்த பட்டப் படிப்பில் சொல்லித் தரவில்லையே என்று யோசித்தார் விற்பனை ஆலோசகர்.
ப.காளிதாசன், நீர்விளங்குளம்.
கோபத்தில் கண்டதைத்
தூக்கிப் போடுவதை விட...
அந்த கோபத்தையே
தூக்கிப் போட்டுப் பாருங்கள்...
வாழ்க்கை சிறப்பாகும்.
ஏ.எம்.ஷெரீப், புதுக்கோட்டை -1.
இருசக்கர வாகனத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியுமா ?
கடைப்பிடிக்கும்வகையில் அதை மாற்றி அமைத்துஇருக்கிறார் திரிபுரா மாநிலம் அகர்தாலாவைச் சேர்ந்த மெக்கானிக் பார்த்த சாஹா.
அவர் ஒரு பழைய மோட்டார் பைக்கை வாங்கி அதன் இரு சக்கரங்களின் இடையே நீண்ட "ராடை' வைத்து இணைத்து இருக்கிறார். இதனால் பைக்கை ஓட்டுபவருக்கும், பைக்கின் பின் அமர்ந்திருப்பவருக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி ஏற்பட்டது.
இதை பேட்டரி ஆற்றலில் இயங்குமாறு வடிவமைத்திருக்கிறார். மணிக்கு 40 கி.மீ. வேகம் வரை செல்லும் இந்த இருசக்கர வாகனத்தின் பேட்டரியை 3 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும். ஒருமுறை சார்ஜ் செய்ய ரூ.10 செலவாகும்.
தனது மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல இந்த வாகனத்தைப் பயன்படுத்தப் போவதாகச் சொல்லும் அவர், பள்ளி வாகனத்தில் மகளை அனுப்ப அச்சப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
என்.ஜே., சென்னை - 58
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...