சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பேல்பூரி

யாரும் தெரி​யும்,யாவும் தெரி​யும்,பயம் தெரி​யாது.

News image
Updated On :17 ஜூலை 2020, 4:34 pm

தினமணி


கண்டது


(​கு​டந்​தை​யில் இரு​சக்​கர வாக​னம் ஒன்​றில்)​

யாரும் தெரி​யும்,
யாவும் தெரி​யும்,
பயம் தெரி​யாது.

​மா.​உ​ல​க​நா​தன், திரு​நீ​லக்​கு​டி.​

(உடு​மலை அருகே ஓர் கிரா​மத்​தின் பெயர்)

ஜிலேபி நாயக்​கன் பாளை​யம்

நா.இ​ர​வீந்​தி​ரன், வாவி​பா​ளை​யம்.
 

(​ம​துரை கோ.பு​தூ​ரில் ஒரு மருந்​துக் கடை​யில் எழு​தப்​பட்​டி​ருந்த வாச​கம்)​

உன் வலியை நீ உ​ணர்ந்​தால்
நீ உ​யி​ரோடு இருக்​கி​றாய் என்று அர்த்​தம்.
பிறர் வலியை நீ உ​ணர்ந்​தால்,
நீ ம​னி​த​னாய் இருக்​கி​றாய் என்று அர்த்​தம்.


​எஸ்.​எம்.​சுல்​தான், மது​ரை-7.

கேட்டது


(கோபி​செட்டிப்பாளையத்தில் பழக்​கடை அருகே இரு மாண​வர்​கள்)

"நான் லாக் டவுன்ல சூப்​பராபடிச்​சேன் மாப்பு. இப்டி பரீட்சை வைக்​காம போய்ட்​டாங்​களே டா''
""டேய் எப்​ப​வும் செல்​லும் கையுமா ஸ்டே​டஸ் போட்டுட்டு திரிஞ்​சுட்டு, மன​சாட்​சிக்கு மாஸ்க் போட்டுட்​டுப் பேச​றியே மாமு''

கி.ச​ரஸ்​வதி,
ஈரோ​டு.​

(சென்னை அசோக் நக​ரில் உள்ளஒரு வீட்டு வாச​லில் இரு பெண்​கள்)​

""நேத்து சப்​போட்டா ஜூஸ் செய்​ய​லாம்னு மிக்​ஸி​யில் போட்டு அரைச்​சேனா... சாறே வர​லைடி''
""நல்லா கவ​னிச்​சியா... சப்​போட்டா பழத்​துக்​குப் பதில் உரு​ளைக் கிழங்​கைப் போட்டு​ருக்​கப் போறே''


மல்​லிகா அன்​ப​ழ​கன்,
சென்னை-78.


யோசிக்கிறாங்கப்பா!


ஒரு​வர் திமி​ருக்​குப் பின்​னால் இருப்​பது கோபம்...
ஒரு​வர் கோபத்​துக்​குப் பின்​னால் இருப்​பது ஏமாற்​றம்...
ஒரு​வர் ஏமாற்​றத்​துக்​குப் பின்​னால் இருப்​பது அன்பு.

ப. பச்​ச​முத்து,
கிருஷ்​ண​கி​ரி.​

மைக்ரோ கதை

இரண்டு இளை​ஞர்​கள் ஓர் ஞானி​யைச் சந்​தித்து உரை​யா​டி​னர். அவர்​க​ளில் ஒரு​வன், "" உல​கில் பொய்யை விட உண்​மைக்கு மதிப்பு அதி​க​மாக இருக்​கி​றதே... ஏன் ஐயா?'' என்று கேட்டான்.

""நானும் பதி​லுக்கு ஒரு கேள்வி கேட்கி​றேன். உல​கில் இரும்​புச் சங்​கி​லியை விட, தங்​கச்சங்​கி​லிக்கு அதிக மதிப்பு ஏன்?'' என்று கேட்டார் அந்தஇளை​ஞ​னி​டம்.

""இரும்பு தாரா​ள​மா​கக் கிடைக்​கி​றது. அத​னால் அதன் மதிப்பு குறை​வாக இருக்​கி​றது. தங்​கம் அரி​தாக எங்கோ ஓரி​டத்​தில்​தான் கிடைக்​கி​றது. அத​னால் அதன் மதிப்பு அதி​கம்'' என்​றான் அந்த இளை​ஞன்.

""இந்த உதா​ர​ணம் போதும் தம்பி... உல​கில் பொய் தாரா​ள​மாக இருக்​கி​றது. அத​னால் அதற்கு மதிப்பு இல்லை. உண்மை பேசு​ப​வர்​க​ளைக் கண்​டு​பி​டிப்​பதே அரி​தாக இருக்​கி​றது. அத​னால் அதற்கு மதிப்பு அதி​க​மாக இருக்​கி​றது'' என்​றார் ஞானி.

அ.ப.​ஜெ​ய​பால், சிதம்​ப​ரம்

எஸ்.எம்.எஸ்.

ஒவ்​வொரு தோல்​வி​யும் ஓர் அனு​ப​வம்,
ஒவ்​வொரு இழப்​பும் ஒரு லாபம்;
ஒவ்​வொரு ஏமாற்​ற​மும் ஓர் எச்​ச​ரிக்கை,
ஒவ்​வொரு காணா​மல் போத​லும் ஒரு தேடல்!

எல். மோக​ன​சுந்​தரி, கிருஷ்​ண​கிரி- 1



அப்படீங்களா!

எழு​து​வ​தற்கு எது வேண்​டும்? பேனா வேண்​டும். காகி​தம் வேண்​டும். இந்த டட்ழ்ங்ங் நம்​ஹழ்ற் டங்ய் உங்​க​ளி​டம் இருந்​தால் காகி​தம் தேவை​யில்லை. நீங்​கள் எதில் வேண்​டு​மா​னா​லும் எழு​த​லாம். உங்​கள் கையில் எழு​த​லாம். கத​வில் எழு​த​லாம். கார் ஓட்டிக் கொண்டு செல்​லும்​போது எழுத நினைத்​தால் ஒற்​றைக் கையில் காரில் எழு​த​லாம். இப்​படி எழு​தும் எது​வும் அடுத்த சில நொடி​க​ளில் அது உங்​க​ளு​டைய போனுக்கோ, லேப் டாப்​பிற்கோ சென்​று​வி​டும்.

நீங்​கள் எழு​தி​யதை இந்​தப் பேனா நினை​வில் வைத்​துக் கொள்​ளும். தேவைப்​ப​டும்​போது பயன்​ப​டுத்​திக் கொள்​ள​லாம். எழு​து​கிற கைக​ளின் அசை​வு​களை அளக்​கும் ஆப்​டி​கல் டிரான்ஸ்​லே​ஷன் மெசர்​மென்ட் தொழில்​நுட்​பம் வாயி​லாக இயங்கும் இந்தப் பேனாவை கணி​னி​யின் மெளஸ் போல​வும் பயன்​ப​டுத்​த​லாம். புளு டூத் மூலம் தக​வல்​க​ளைப் பரி​மா​றிக் கொள்​ளும் இந்​தப் பேனா​வில் எழு​து​வது மட்டு​மல்ல, படம் வரைந்​தா​லும் அது​வும் உங்​க​ளு​டைய ஸ்மார்ட் போனுக்கோ, லேப்​டாப்​பிற்கோ, கணி​னிக்கோ சென்​று​வி​டும்.

​என்.ஜே., சென்​னை-58.​
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.