ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திரைக் கதிர்

பிரபாஸ், பூஜா ஹெக்டே  நடிக்கும் படம் "ராதே ஷியாம்'.  இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகிறது.

News image
Updated On :30 அக்டோபர் 2020, 5:12 pm

தினமணி

பிரபாஸ், பூஜா ஹெக்டே  நடிக்கும் படம் "ராதே ஷியாம்'.  இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகிறது. இது ஜரோப்பாவில் நடக்கும் காதல் கதை.  தற்போது ஜார்ஜியாவில்  படப்பிடிப்பு நடந்து வருகிறது.

--------------------------------------------------------------------------------

"துப்பறிவாளன்', "நம்ம வீட்டு பிள்ளை'  படங்களில் நடித்தவர்  அனு இம்மானுவல். தமிழ், தெலுங்கில் உருவாகும் "மகா சமுத்திரம்' எனும் படத்தில் இவரும் ஒரு நாயகியாக இணைந்துள்ளார். மல்டி ஸ்டார் படமான இதில் சர்வானந்த் , சித்தார்த், அதிதிராவ் நடிக்கின்றனர்.

--------------------------------------------------------------------------------

நயன்தாரா நீண்ட இடைவெளிக்குப்   பிறகு மலையாளத்தில் "நிழல்' என்ற படத்தில் நடிக்கிறார்.  த்ரில்லர் படமான இதில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை.

--------------------------------------------------------------------------------


சின்னத்திரையில் பிரபலமான நடிகை வாணி போஜன் "ஓ மை கடவுளே', "லாக்கப்' ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தன. இப்போது 5 படங்களில் நாயகியாக நடிக்கிறார். இதனால் மெகா தொடர்களிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். 

--------------------------------------------------------------------------------
 

அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் முடிந்த பின்னர், இரண்டு வாரங்கள் மட்டும் கணவருடன் நேரம் செலவழிக்கத் திட்டமிட்டிருக்கும் காஜல் அகர்வால், நவம்பர் மூன்றாவது வாரத்திலிருந்து தொடர்ந்து படப்பிடிப்புக்குச் செல்ல முடிவெடுத்துள்ளாராம்.

--------------------------------------------------------------------------------

சிலம்பரசன்  கடந்த சில மாதங்களாக சுட்டுரை, முகநூல்  போன்ற சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் மீண்டும்  சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களைச் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

--------------------------------------------------------------------------------

 
நடிகர் கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு 2013-இல் உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. 7 ஆண்டுகளுக்குப் பின் ரஞ்சனி மீண்டும் கர்ப்பமான நிலையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.