ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திரைக் கதிர்

படங்களைத் தயாரிப்பதில் சமீபமாக ஆர்வம் காட்டி வருகிறார் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.

News image
Updated On :8 நவம்பர் 2020, 12:30 am

DIN


படங்களைத் தயாரிப்பதில் சமீபமாக ஆர்வம் காட்டி வருகிறார் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் "மாமனிதன்'  படத்தை தற்போது தயாரித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்...   தன்னை படத்தயாரிப்பில் ஈடுபட வேண்டாம் என அஜித்  அறிவுரை தந்ததாக  தெரிவித்துள்ளார்  யுவன் ஷங்கர் ராஜா.

****************************************

"பப்ஜி - பொல்லாத உலகில் பயங்கர கேம்' படத்தில் அர்ஜுமன், ஐஸ்வர்யா தத்தா, அனித்ரா, ஆராத்யா, சாந்தினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   பாடல்களை தீபாவளியன்றும், படத்தை பொங்கலன்றும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

****************************************

சமுத்திரக்கனி, சுனைனா, நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளி வந்த படம் "சில்லுக்கருப்பட்டி'.  பரவலான வரவேற்பைப் பெற்ற இப்படம் , ஜப்பான் நாட்டின், "ஓசகா' சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில், திரையிடத் தேர்வாகியுள்ளது. இப்படத்தை இயக்கியவர்  ஹலிதா சமீம்.

****************************************

விஜய்யை வைத்து "துப்பாக்கி', "கத்தி', "சர்கார்'என ஹாட்ரிக் ஹிட் படங்களைக் கொடுத்தவர்  ஏ.ஆர்.முருகதாஸ்.  இந்த நிலையில் விஜய்யின் 65-ஆவது படத்தை அவர் இயக்குவதாக இருந்தது. இந்த நிலையில் அந்தப் படத்திலிருந்து விஜய் விலகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

****************************************

சூர்யாவின் 40-ஆவது படத்தை இயக்குநர்  பாண்டிராஜ் இயக்குவது உறுதியாகியுள்ளது.  இந்தப் படத்தை  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

****************************************

ஓடிடி  தளங்கள் ஆபாச தளங்களாக உள்ளதாக நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.  ""படங்களை குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பார்ப்பது ஓர் அனுபவம்.  ஆனால், அதன் எல்லைகள் இப்போது மாறி விட்டது. ஓடிடி தளங்களுக்கு தணிக்கை என்பது அவசியமான ஒன்று'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.