பேல்பூரி
கடன் கேட்காததை கடமை எனக் கொண்ட வாடிக்கையாளர்களே... உங்களின் இந்த கண்ணியத்திற்கு நிர்வாகம் கட்டுப்படுகிறது.


(பட்டுக்கோட்டையில் உள்ள நகைக்கடை ஒன்றில்)
அணிமணி பொற்சாலை
சி.ரகுபதி, போளூர்.
(சென்னை வடபழனியில் உள்ள மொபைல் கடையின் பெயர்)
பொன் மொபைல்ஸ்
கோ.குப்புசுவாமி, சென்னை-93.
(நெல்லை டவுனில் ஒரு கடையில்)
கடன் கேட்காததை கடமை எனக் கொண்ட வாடிக்கையாளர்களே...
உங்களின் இந்த கண்ணியத்திற்கு நிர்வாகம் கட்டுப்படுகிறது.
ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
(தஞ்சாவூர் சிவன் கோயில் புது தெருவில் இருவர்)
""ஊருக்குப் போன உன் பொண்டாட்டி திரும்பி வந்துட்டங்களா?''
""பஸ் எல்லாம் விட்டுட்டாங்க... எங்கே வந்துடுவாளோன்னு பயந்து
கிட்டு இருக்கேன்...நீ வேற கடுப்பேத்திகிட்டு இருக்க.''
- ராம் ஆதிநாராயணன்,
தஞ்சாவூர் - 1
(நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகில் நடுத்தர வயதுடைய நபரும் இளைஞரும்)
""தம்பி..கொஞ்சம் வண்டிய நிப்பாட்டுங்க''
""ஏன் சார், டூ வீலரை வழி மறிக்கிறீங்க ?''
""உங்களுக்கு சளி, இரும்மல் ஏதாவது இருக்கா?''
""எதுவும் இல்லை; அது சரி நீங்க மருத்துவ குழுவா?''
""ச்சேச்சே...அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல...
ஸ்டேடியம் வரை போகணும் ; அதான் "லிப்ட்' கேட்பதற்காக , அப்படி கேட்டேன்''
மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை.
அடிபடும் போது தான் நிதானம் வருகிறது !
வாகனத்திலும் சரி...
வாழ்க்கையிலும் சரி...
காளிதாசன், நீர்விளங்குளம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...