விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திரைக் கதிர்

விஜய்யின் "நாளைய தீர்ப்பு'  படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ்.  சமீபத்தில் ரஜினியின் "காலா' படத்தில் நடித்தன் மூலம், மீண்டும் சினிமாவில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 12:30 am

DIN


விஜய்யின் "நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஈஸ்வரி ராவ். சமீபத்தில் ரஜினியின் "காலா' படத்தில் நடித்தன் மூலம், மீண்டும் சினிமாவில் பரபரப்பாக இயங்கி வருகிறார். தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக படங்கள் கைவசம் வைத்திருக்கும் நடிகையாக மாறி விட்டார். தமிழில் மட்டுமே சுமார் 7 படங்கள் இவர் கைகளில் இருக்கின்றன.

-----------------------------------------------------------------------------------------------------

ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற "அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார். பிரசாந்துடன் ஜோடியாக நடிப்பது யார் என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா ஆகியோருடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

-----------------------------------------------------------------------------------------------------

காமெடியில் இருந்து ஹீரோவாக மாறிய சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் "டிக்கிலோனா'. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. சந்தானத்துடன் சேர்ந்து ஆனந்தராஜ், முனீஸ் காந்த், யோகி பாபு என அனைத்து காமெடி நட்சத்திரங்களும் அடித்திருக்கும் லூட்டிக்கு அளவே இல்லை என்கிறது படக்குழு.

-----------------------------------------------------------------------------------------------------

ஐஸ்வர்யா ராஜேஷின் 25-ஆவது படத்தின் தலைப்பு "பூமிகா'. இந்தப் படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் என்பவர் இயக்குகிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தின் போஸ்டரை சிவகார்த்திக்கேயன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

-----------------------------------------------------------------------------------------------------

இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய, "கரோனா கண்ணாலே...' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலுக்கு, அமிதாஸ், இந்துஜா நடித்துள்ளனர், இனி பாடலாசிரியர்களின் கையில் சிக்கி, இந்த கரோனா வைரஸ் என்ன பாடுபடப் போகிறதோ என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.